நாட்டிலேயே முதல்முறை.. உடலில் கீறல் கூட இருக்காது.. ராஜு ஸ்ரீவத்சவா போஸ்ட்மார்ட்டம் பின்னணி
டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜு ஸ்ரீவத்சவாவிற்கு உடலை வெட்டாமல் மெய்நிகர் முறையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக உடலை வெட்டாமல் உடல் கூறாய்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரபலங்கள் இரங்கல்
ராஜு ஸ்ரீவஸ்தவா மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நவீன முறையில் உடற்கூறாய்வு
எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல் மருத்துவர்களால் நவீன வடிவில் மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் மெய்நிகர் தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவே மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது.

நவீன முறை என்றால் என்ன?
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் தலைமை மருத்துவர் சுதிர் குப்தா கூறுகையில், ஒருவர் உயிரிழந்தால், உடலில் உள்ள அனைத்து பாகங்கள் அறுக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் மீண்டும் அனைத்து பாகங்களும் சரியாக தைக்கப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். இதுதான் பொதுவாக செய்யப்படும் உடற்கூறாய்வு முறை. இதற்கு சில நேரம், சில நாட்கள் கூட காத்திருக்க வேண்டும். இவ்வகைக்கு பெரும்பாலான மக்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

மெய்நிகர் முறை
இந்த மெய்நிகர் முறையில், உடல் ஒரு வளைவில் வைக்கப்பட்டு சிடி ஸ்கேன் செய்யப்படும். இந்த சிடி ஸ்கேன் நுட்பம், உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் மருத்துவர்களுக்கு காட்டிவிடும். பழைய முறையில் உடலில் உள்ள சில பகுதிகளை மருத்துவர்ளால் பார்க்க முடியாது. ஆனால் மெய்நிகர் முறையில் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் மருத்துவர்களால் தெரிந்துகொள்ள முடியும். மெய்நிகர் முறையிலான உடற்கூறாய்வு நாங்கள் நேரலையில் பார்ப்பதோடு, எண்ணற்ற முறை பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களால் படிக்க முடியும் என்று தெரிவித்தார்.

எவ்வளவு செலவு?
இந்த மெய்நிகர் முறையிலான உடற்கூறாய்வு முறை கண்டறிய எய்ம்ஸ் மருத்துவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் மெய்நிகர் தடயவியல் ஆய்வு கூடத்தை அமைக்க சுமார்ரூ.10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உடலில் செய்யப்பட்ட உடற்கூறாய்வில் ஒரே ஒரு ஊசி மட்டுமே கையில் குத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற காலத்தில் செலுத்தப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரவிலும் பிரேத பரிசோதனை
அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனையில் 24 மணி நேரமும் உடற்கூறாய்வு நடைபெற்று வருவதாக சுதிர் குப்தா தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பு என்னவென்றால், இதுபோன்ற உடற்கூறாய்வை இரவு நேரங்களில் செய்யும்போதும், அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. அந்த முடிவுகள் நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications