தமிழகத்தை தொடர்ந்து வரிசை கட்டிய கர்நாடகா! வறட்சி நிதி எங்கே? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்
டெல்லி: கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் போட்டி இருக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவை கொடுக்கவில்லை. எனவே, மாநிலத்தின் முக்கிய அணைகளில் நீர் முன்னெப்போதையும் விட குறைந்திருக்கிறது. இதனால் பெங்களூர் போன்ற நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இது சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. வறட்சியை எதிர்கொள்ளள நிவாரணம் கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு தரப்பிலிருந்து நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகியிருந்தனர்.
கர்நாடக மாநில அரசு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மாநில அரசு வறட்சி குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதனையடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஆய்வை மேற்கொண்டது. குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்டிருக்கிறது. அறிக்கை வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன பின்னரும் கூட இப்போது வரை அறிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என கபில் சிபில் வாதாடினார்.
அதேநேரம் ஒரு மாதத்திற்குள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாநில அரசுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளனர். மேலும் ஏற்கெனவே, தமிழ்நாடு வெள்ள நிவாரணம் கேட்டும், கேரளா கூடுதல் கடன் பெற அனுமதி கேட்டும் கடந்த வாரங்களில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்ததை சுட்டிக்காட்டி கவலையும் தெரிவித்திருந்தனர். மட்டுமல்லாது, இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே போட்டி வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்த அளவில் தற்போது ஆழ்துளை கிணறுகள் கூட வற்றிவிட்டதால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே டேங்கர் லாரி தண்ணீரின் விலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. நிலைமையை எதிர்கொள்ள முடியாத ஐடி ஊழியர்கள் சென்னை நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். வறட்சியை சமாளிக்க மாநில அரசும் முடிந்த வரை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications