கோவாக்சின் கையிருப்பு 6 கோடி டோஸ்.. மக்களுக்கு போட்டது 2 கோடி.. மற்றவை எங்கே போனது? பரபர டேட்டா
டெல்லி: இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளின் உற்பத்தி அளவுக்கும், தினசரி தடுப்பூசி போடப்படும் அளவிற்கும் இடையில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது. அதிலும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி விஷயத்தில் இந்த வித்தியாசம் ரொம்ப அதிகமாக உள்ளது.
Recommended Video
பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசி வியாழக்கிழமை காலை வரை நாடு முழுவதும் 2.1 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அறிக்கைகளை ஒன்றாக இணைத்து பார்த்தால் குறைந்தபட்சம் 6 கோடி டோஸாவது மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். அப்படியானால், காணாமல் போனது மூன்றில் இரண்டு அளவு. அவை எங்கே? என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
இது தொடர்பாக அறிந்து கொள்ள, ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் அலுவலகத்தை ஊடகங்கள் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதிலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பாரத் பயோடெக் சொன்ன டேட்டா
நிறுவனத்தின் சிஎம்டியான கிருஷ்ணா எல்லா ஏப்ரல் 20 அன்று 15 மில்லியன் டோஸ் மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் 20 மில்லியன் டோஸ் உற்பத்தியாகும் என்றும் கூறினார். மே மாதத்தில் உற்பத்தி 30 மில்லியன் அல்லது 3 கோடியாக இருக்கும் என்றும் அவர் கூறினார், ஆனால் திட்டமிடப்பட்ட அளவை அதிகரிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உற்பத்தியான 35 மில்லியன் டோஸ் மற்றும், மே மாதத்தில் மேலும் 20 மில்லியன் டோஸ்களை கணக்கில் வைத்தாலும் கணக்கு இடிக்கிறது.

மத்திய அரசு தகவலை பாருங்க
மத்திய அரசு கொரோனா வேக்சின் தொடர்பாக, இரண்டு தனித்தனி பிரமாணப் பத்திரங்களில், அதாவது ஒன்று உச்சநீதிமன்றத்திலும், இன்னொன்று கேரள ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்திருந்தது. அதில், சமீபத்தில் மே 24 வரை கோவாக்சின் உற்பத்தி ஒரு மாதத்திற்கு 2 கோடி அளவுகளில் இருப்பதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் ஒன்றாக எடுத்து கூட்டிப் பார்த்தால், மே மாத இறுதிக்குள், 5.5 கோடி டோஸ் கோவாக்சின் கிடைத்திருக்க வேண்டும்.

கூட்டிக் கழிச்சி பார்த்தால் 8 கோடி டோஸ்
மேலும், பாரத் பயோடெக்கின் சிஎம்டி கிருஷ்ணா எலா, ஜனவரி 5 ஆம் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, தங்கள் நிறுவனம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கையிருப்பில் வைத்திருப்பதாகக் கூறினார். அதை சேர்த்தால் மொத்தம் 7.5 கோடி டோஸ். மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் செய்யப்பட்ட உற்பத்தியை சேர்த்தால், 8 கோடி டோஸ் வந்திருக்க வேண்டும்.

ஏற்றுமதியிலும் லாஜிக் இல்லை
ஓகே. இவற்றில் சில ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என வைத்துக் கொள்வோம். ஆனால் இந்தியாவின் அனைத்து தடுப்பூசி ஏற்றுமதியும் சுமார் 6.6 கோடி அளவுகள்தான். இதன் பெரும்பகுதி கோவிஷீல்ட் ஆகும். சரி, 2 கோடி டோஸ் கோவாக்சின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்தது என்று நாம் கருதினாலும், இந்தியாவில் பயன்படுத்த 6 கோடி டோஸ்கள் இருந்திருக்க வேண்டும். அப்படியில்லையே. 2.1 கோடி டோஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதே.

பல மாநிலங்களில் கிடைக்கவில்லை
ஆனால் நாட்டில் நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. முதல் டோஸ் கோவாக்சின் போட்டவர்களுக்கே, இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை. கோவாக்சின் பற்றாக்குறை குறித்து பல மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன. உதாரணமாக, டெல்லியில், இரண்டாவது ஷாட்டுக்காகக் காத்திருப்பவர்களுக்கு கூட இந்த வாரம் கோவாக்சின் இல்லாமல் தத்தளிக்கிறார்கள். கோவாக்சின் பல்வேறு மாநிலங்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியுள்ளன என்பது பற்றிய தரவு வெளியாகி தலை சுற்ற வைக்கிறது. டெல்லியில், கோவாக்சின் கிட்டத்தட்ட 31% பங்கு போடப்பட்டுள்ளது. மற்றவை கோவிஷீல்ட். ஆனால், 14 சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கோவாக்சின் மருந்தை ஒரு டோஸ் கூட வழங்கவில்லை. அப்படியானால் எஞ்சிய 4 கோடி டோஸ் எங்கே?
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications