இதுவரை இல்லாத சரிவு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11873 பேருக்கு கொரோனா.. 357 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 455,100 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 34,201,357 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 11873 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 250 நாட்களில் இந்தியாவில் பதிவான மிக குறைவான தினசரி கொரோனா கேஸ் பாதிப்பு இதுதான்.
இந்தியாவில் இதுவரை 33,575,623 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 170,634 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன, தீபாவளியை முன்னிட்டு மக்கள் வெளியே சென்று வருகிறார்கள். ஆனாலும் கேஸ்கள் இன்னும் உயரவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,96,328 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,033 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,47,504 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 12,791 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் ஒரு பக்கம் மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் தொடர்ந்து பழைய கொரோனா மரணங்கள் லிஸ்டில் சேர்க்கப்பட்டு வருகிறது. விடுபட்ட மரணங்கள் கேரளாவில் கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 281 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவை கடந்த வாரம் திடீரென அதிகரித்த கேஸ்கள் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6664 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,21,995 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 74,808 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 28,873 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,17,785 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைவான கேஸ்கள் நேற்று பதிவாகி உள்ளன. கடந்த ஒன்றரை வருடத்தில் முதல் முறை மகாராஷ்டிராவில் 1000க்கும் குறைவான கேஸ்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,03,850 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 23,184 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,028 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,37,025 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 12 பேர் பலியாகி உள்ளனர்.'

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,86,276 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 290 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,017 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,39,647 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8589 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications