டிஸ்சார்ஜை விட அதிகமாக பதிவான புதிய கேஸ்கள்.. இந்தியாவில் 18,359 பேருக்கு கொரோனா.. 160 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக இந்தியாவில் 15 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று 18 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா மூன்றாம் அலை அக்டோபர் இறுதியில் இருந்து டிசம்பருக்குள் வர வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே ஐசிஎம்ஆர் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில்தான் சரியாக தற்போது கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. பண்டிகை நாட்கள் விடுமுறை, சுற்றுலா தலங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா கேஸ்கள் மீண்டும் இந்தியாவில் அதிகரிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா கொரோனா

இந்தியா கொரோனா

இந்த நிலையில்தான் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34,126,682 பேர் இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 160 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 452,844 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

இந்தியாவில் இதுவவரை 3,34,88,181 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 17,558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 2 வாரத்திற்கு பின் மீண்டும் தினசரி கேஸ்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கேஸ்களை விட அதிகமாக பதிவாகி உள்ளது. இதனால் இந்தியாவில் 1,72,519 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இதுவரை 3ம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாறாக தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,90,633 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,948 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,40,627 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 14,058 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,84,484 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 462 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,976 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,37,405 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். மேலும் அங்கு 9074 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அங்கு பண்டிகை நாட்களுக்கு பின் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,96,645 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1882 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 25,728 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,886 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,27,426 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 21 பேர் பலியாகி உள்ளனர்.'

கேரளா

கேரளா

கேரளாவில் கொரோனா கேஸ்கள் திடீரென மொத்தமாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரமாக 10 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி இருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 11150 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,79,790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 82,804 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 27,084 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,69,373 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 82 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+