கேரளாவில் திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. இந்தியா முழுக்க 19,177 பேர் பாதிப்பு.. 249 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக 18 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா கேஸ்கள் லேசாக உயர்ந்து உள்ளன. கேரளாவில் மீண்டும் தினசரி கேஸ்கள் உயர தொடங்கி உள்ளன.

நாடு முழுக்க பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் கொரோனா கேஸ்கள் உயரும் வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படியே தற்போது கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன.

பாதிப்பு

பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 249 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 4,51,469 பேர் இதுவரை கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளனர். 3,40,19,680 பேருக்கு இதுவரை இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,00,004 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 3,33,55,097 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக 8 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தது. ஆனால் தற்போது திடீரென உயர்ந்த கேஸ்கள் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,20,698 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 11079 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 97,694 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,571 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 46,95,904 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 123 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

கேரளாவில் கொரோனா கேஸ்கள் உயர்ந்தாலும் அருகில் இருக்கும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் இன்னும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தினசரி கேஸ்கள் தமிழ்நாட்டில் 1300க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,82,137 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1280 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,833 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,30,654 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 15,650 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

அதேபோல் மகாராஷ்டிராவில் தினசரி கேஸ்கள் கொஞ்சம் உயர்ந்து உள்ளது. நேற்றை விட 200 கேஸ்கள் கூடுதலாக பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,83,896 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 2219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 29,555 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,670 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,11,075 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 49 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா காரணமாக 20,58,582 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 517 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 14,276 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,37,691 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 6,615 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் ஆந்திராவில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+