இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14641 பேருக்கு கொரோனா.. 442 பேர் பலி.. கேரளாவில் உச்சம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இதுவரை 34,189,484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14641 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் பெரிய அளவில் கேஸ்கள் உயரவில்லை. இந்தியாவில் இதுவரை 454,743 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 33,559,649 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,699 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 175,092 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் தொடர்ந்து பழைய கொரோனா மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அங்கே அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 335 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் கடந்த வாரம் திடீரென அதிகரித்த கேஸ்கள் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,06,793 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 81,155 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 28,592 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,97,409 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் குறைந்து வருகிறது. இதுவரை எங்கும் திடீரென பாதிப்புகள் அதிகரிக்கவில்லை.. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,95,216 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,019 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,46,163 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 13,034 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,85,986 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 388 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,007 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,39,239பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8711 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு உயராமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,02,961 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 23,894 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,016 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,35,439 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 15 பேர் பலியாகி உள்ளனர்.'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+