Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகம் முழுவதும் 18.29 கோடி பேர் கொரோனாவுக்கு பாதிப்பு - 16.75 கோடி பேர் மீண்டனர்

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,65,641 பேர் மீண்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,75,43,411 பேராக அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,86,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,29,60,893 பேராக அதிகரிப்பு.கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,65,641 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,75,43,411 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா கொடுந்தொற்று காரணமாக உலக மக்களின் இயக்கம் முற்றிலும் முடங்கிப் போனது. பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

Covid 19 Update: Corona 18,29,60,893 people affected in worldwide

2020ஆம் ஆண்டின் இறுதிவரை கொரோனாவின் தாக்கம் பரவலாக இருந்த நிலையில் 2021ஆண்டில் பல நாடுகளில் இரண்டாவது அலை வீசத் தொடங்கியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியாதான். தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது.

உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 8 லட்சத்திற்கு மேல் பதிவானது. கடந்த மார்ச் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கடந்த எப்ரல் முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலானது. இதன் காரணமாக 4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக குறைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என கொரோனா உருமாறி பரவி வருகிறது. பல நாடுகளில் மூன்றாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. சில நாடுகள் கொரோனா நான்காம் அலை வீசுவதைப் பற்றி பேசத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 3,86,353 பேராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,29,60,893 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,65,641பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மொத்தம் 16,75,43,411 பேர் மீண்டுள்ளனர்.

கொரோனாவால் ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 39,62,357 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,14,55,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 79,198 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+