கர்நாடகாவில் 40 நாளில் 23 பேர் மாரடைப்பால் பலி.. கொரோனா தடுப்பூசி தான் காரணமா? மறுத்த மத்திய அரசு
டெல்லி: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மட்டும் 40 நாட்களில் 23 பேர் திடீர் மாரடைப்பால் பலியாகி உள்ளனர். இந்த மாரடைப்புக்கு கொரேனாா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று முதல்வர் சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 பேர் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். கடந்த 40 நாட்களை எடுத்து கொண்டால் ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இறந்தவர்கள் அனைவரும் இளம் மற்றும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கும் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 20 வயது நிரம்பிய 2 இளைஞர்கள், 2 இளம்பெண்களும் அடங்குவார். மேலும் 41 வயது முதல் 59 வயதுக்குள் 7 பேரும், 60 வயதுக்கு மேல் ஒருவரும் பலியாகி உள்ளனர்.
இது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கர்நாடகா முதல்வர் சித்தரமையா பத்திரிகையாளர்களிடம் கூறும்போது,‛‛கொரோனா தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கொரேனாா தடுப்பூசி ஒரு காரணமாக இருக்கலாம் என்று உலகளாவிய ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன'' என்று கூறினார்.
மேலும் ஜெயதேவா மருத்துவமனையில் இதயவியல் பிரிவின் இயக்குநரும், டாக்டருமான ரவீந்திரநாத் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரணை நடத்தி இறந்தவர்களுக்கான காரணம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளன. இதற்கான உத்தரவை முதல்வர் சித்தராமையா பிறப்பித்தார். இதனால் கர்நாடகாவில் மாரடைப்பால் இறந்தவர்களின் பின்னணியில் கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்குமோ? என்ற கேள்வி எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக ‛‛ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் ஆய்வுகளில் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஜெனிட்டிக்ஸ், வாழும்முறை, உடலில் இருக்கும் குறைபாடு, கொரோனாவில் இருந்து மீண்டாலும் இருக்கும் உடல் உபாதை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications