மகிழ்ச்சியான செய்தி...இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது...அமைச்சர் தகவல்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் எவ்வாறு இந்த தடுப்பு ஊசியை பிரித்து விநியோகிப்பது என்பது குறித்து சிறப்புக் குழுவினர் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் இன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஹர்ஷ் வர்தன், ''நாட்டில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடப்படும். எவ்வாறு அனைவருக்கு போடுவது என்பது குறித்தும், விநியோகிப்பது என்பது குறித்தும் சிறப்புக் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்'' என்றார்.

COVID-19 vaccine will available in India early 2021 says Harsh Vardhan

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 71லட்சத்தை கடந்த பின்னர் இந்த தகவலை இன்று ஹர்ஷ் வர்தன் வெளியிட்டுள்ளார். இன்னும் இந்தியாவில் 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 62,27,296 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,09,856 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவில் கொரோனா தொற்று இன்று (செவ்வாய் கிழமை) குறைந்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 55,342 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 70,000 என்ற அளவில் இருந்து வந்தது.

நாட்டில் கடந்த ஐந்து வாரங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 9 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 15,35,315 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 40,514 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் டெல்லி ஆகியவை உள்ளன.

நாட்டில் இதுவரை 8,89,45,107 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமை மட்டும் 10,73,014 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+