மத்திய அரசின் மாபெரும் சாதனை.. ஒரே ஆண்டில் 25% குறைந்த காசநோய் பாதிப்பு.. காரணம் கொரோனா ஊரடங்கு?
டெல்லி: கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் காசநோய் பாதிப்பு 25% வரை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அதிகப்படியான காசநோய் நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் காசநோய் பாதிப்பு 25% வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

குறைந்தது காசநோய்
இந்தியாவில் கடந்த 2017இல் 18.2 லட்சம் பேருக்குக் காசநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 2018இல் அதைவிடக் கூடுதலாக 18%, அதாவது 21.5 லட்சம் பேருக்கும், 2019இல் காசநோய் பாதிப்பு 18%, உயர்ந்து 24.04 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 2020இல் 18.02 லட்சம் பேருக்கு மட்டும் காசநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஓரே ஆண்டில் காசநோய் பாதிப்பு 25% வரை குறைந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலமே காசநோய் பாதிப்பு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை
காசநோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் (2017-2025) நடைமுறைக்கு வந்த பிறகு, காசநோய் பாதிப்பு குறைவது இதுவே முதல்முறையாகும். 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோய் ஒழிக்கப்படும் எனக் கடந்த 2018இல் பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மத்திய அரசு விரிவான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மற்ற சுவாசப் பிரச்சினைகள் பெருவாரியாகக் குறைந்துள்ளன. ஆனால் மற்ற நோய்களுடன் ஒப்பிடுகையில் காசநோய் பாதிப்பு கம்கியான அளவே குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மனிதனின் உடலில் இன்ஆக்டிவாக பல காலம் இருக்கும் என்பதால், காசநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று.

காசநோய் உயிரிழப்புகள்
இந்தியாவின் முக்கிய சுகாதார சிக்கல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள காசநோய் பாதிப்பால் ஆண்டுதோறும் சுமார் 4.80 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். அதாவது சராசரியாக 1400 பேர் காசநோயால் பலியாகின்றனர். இது அதிகாரப்பூர்வ தகவல். இதுபோக பல லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்படாமலேயே மிஸ் ஆகிவிடவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எளிதில் பரவும்
எய்ட்ஸ் அல்லது இதுபோன்ற மோசமான சில பாதிப்புகளைக் கொண்டிருப்பவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். இதன் மூலம் அவர்களுக்கு மிக எளிதாகக் காசநோய் போன்ற பாதிப்புகள் எளிதில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோல எளிதாகக் காசநோயால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்களையே முதலில் கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால், இதுபோல காசநோய் பாதிப்பு தங்கள் உள்ளது என்பதே தெரியாமல் இருக்கும் நபர்கள் மூலமே நோய் எளிதாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.

மத்திய அரசு நடவடிக்கை
கொரோனாவுக்கான அறிகுறிகளும் காசநோய்க்கான அறிகுறிகளும் கிட்டதட்ட ஒன்றுதான். இதனால்தான், கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தால் காசநோய் சோதனையையும் எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் லட்சத்தீவு மற்றும் ஜம்மு -காஷ்மீரில் புட்காம் மாவட்டம் காசநோய் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டியூவில் நோயின் தாக்கம் 60 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் லஹால்-ஸ்பிட்டி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம், மும்பையின் பரேல் (வார்டு) மற்றும் மேற்கு திரிபுரா மாவட்டம் ஆகிய பகுதிகளிலும் காசநோய் பாதிப்பு 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் மூலமே காசநோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications