குட் நியூஸ்.. 4 கோடி AstraZeneca டோஸ்களை உருவாக்கிவிட்டோம்..கொரோனா வேக்சின் உற்பத்தியில் சீரம் சாதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்தில் இதுவரை 4 கோடி டோஸ்களை தயாரித்து இருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் மிக முக்கியமான கட்டத்தில் மனித குலம் இருக்கிறது. 120க்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையை செய்து வருகிறது.

இதில் 30 மருந்துகள் தற்போது மனித சோதனை கட்டத்தில் இருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளில் ஆஸ்டெராசெனெகா மருந்து அதிக நம்பிக்கை அளித்துள்ளது. ஆஸ்டெராசெனெகா - ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் AZD1222 தடுப்பு மருந்து மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட மனித சோதனையில் இந்த மருந்து உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்தில் 40 மில்லியன் டோஸ்களை இதுவரை தயாரித்து இருப்பதாக மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த AZD1222 தடுப்பு மருந்தை தயார் செய்யவும், சோதனை செய்யவும் ஆஸ்டெராசெனெகா நிறுவனம் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகிலேயே பெரியது

உலகிலேயே பெரியது

உலகிலேயே சீரம் நிறுவனம்தான் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் காரணமாகவே ஆஸ்டெராசெனெகா நிறுவனம் சீரம் நிறுவனத்தை தடுப்பூசிக்காக அணுகி உள்ளது. AZD1222 தடுப்பு மருந்தை தயாரிப்பதற்காக சீரம் நிறுவனம் புதிதாக இரண்டு தயாரிப்பு யூனிட்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அந்த நிறுவனம் 40 மில்லியன் டோஸ்களை இதுவரை தயாரித்து உள்ளது.

எப்படி

எப்படி

ஆனால் இந்த டோஸ்கள் இந்தியாவிற்கு கிடைக்குமா என்று கூறப்படவில்லை. முடிந்த அளவு கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது. AZD1222 தடுப்பு மருந்தின் இறுதிக்கட்ட சோதனைகளை 1600 பேரிடம் சீரம் நிறுவனம் செய்ய உள்ளது.

தீவிரம்

தீவிரம்

இந்த சோதனை முடிந்த பின் இதன் உற்பத்தி இன்னும் தீவிரம் அடையும். அதேபோல் நோவாவாக்ஸ் நிறுவனத்தின் மருந்துகளையும், சீரம் நிறுவனம்தான் உற்பத்தி செய்ய உள்ளது. இதில் சில சோதனைகளை செய்து அனுமதி கிடைத்த பின் அதற்கான உற்பத்தியை சீரம் நிறுவனம் தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+