மேலும் 44,917 பேருக்கு கொரோனா.. இங்கிலாந்தில் உயரும் தொற்று.. கோவேக்சினுக்கு அங்கீகாரம்
இங்கிலாந்தில் மீண்டும் உயர தொடங்கி உள்ளது கொரோனாவைரஸ் பாதிப்பு
டெல்லி: இங்கிலாந்தில் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துவிட்டது.. நேற்று மட்டும் 44,917 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதன்மூலம் அந்த நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,89,926 ஆக உயர்ந்திருக்கிறது..
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 51.73 லட்சத்தைத் தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.83 கோடியை கடந்து விட்டது.. தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.37 கோடியை தாண்டியது.

கவலைக்கிடம்
இதைதவிர, வைரஸ் பரவியவர்களில் 1.94 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. எனினும், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது...

இங்கிலாந்து
அதற்கேற்றார்போல் தடுப்பூசி பணிகளும் துரிதமாகி உள்ளது.. கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாகி கொண்டிருக்கிறது. ஆனால், எத்தனையோ நாடுகளில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டும்கூட, மீண்டும் பரவ ஆரம்பித்துவிட்டது.. அந்த வகையில் இங்கிலாந்திலும் பாதிப்பு வந்துவிட்டது..

பாதிப்பு
இங்கிலாந்தில் நேற்று மட்டும் 44,917 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதன்மூலம் அந்த நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,89,926 ஆக உயர்ந்திருக்கிறது.. அதேபோல, கொரோனாவால் மேலும் 45 பேர் உயிரிழந்து உள்ளனர்.. இதனால் மொத்த கொரோனா உயிரிழப்பானது, 1,43,972 ஆக கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது அந்நாட்டு மக்களை கவலைகொள்ள வைத்து வருகிறது.

கோவேக்சின்
இதனிடையே, இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்திருந்த நிலையில், இங்கிலாந்தும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, தன்னுடைய நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லிஸ்ட்டில் கோவேக்சினை சேர்த்துள்ளது... இதை பற்றி அந்நாட்டின் போக்குவரத்து துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட்
அதில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கொண்டு, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் இப்போது முதல் அங்கீகரிக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு கொரோனா டெஸ்ட் செய்யவோ, இங்கிலாந்தில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications