டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

#COVID20: பீதியை கிளப்பும் புது வைரஸ்.. ட்விட்டரில் ட்ரெண்டாகிவரும் ''#கோவிட்-20'' ஹேஷ்டேக்..!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோவிட்20 ஹேஷ்டேக்குகள்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரிட்டனில் பரவி வரும் ஒரு புதுவகை வைரஸால் மக்கள் பீதியில் உள்ளனர்.. இந்நிலையில், 'COVID20' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.

இன்னும் கொரோனாவுக்கே விடை கிடைக்காத நிலையில், நாளுக்கு நாள் தொற்று உலகமெங்கும் உயர்ந்தபடியே உள்ளது.. ஒருபக்கம் உயிரிழப்புகளும், மறுபக்கம் டிஸ்சார்ஜ்களும் நடந்து வந்தாலும், தடுப்பூசிகளை எதிர்பார்த்து பல நாடுகள் காத்துள்ளன.

#COVID20 twitter hashtag

இதனிடையே, இந்த கொரோனா குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. அதில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பிரிட்டனில், இன்னொரு வைரஸ் ஆரம்பமாகி உள்ளதாம்.. அந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்தும் வருவதாக சொல்லப்படுகிறது.

பழைய கொரோனா வைரஸை விட மிகவும் வேகமாக இது பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது... இதனால், உலக நாடுகளே அதிக அளவு கலக்கத்தில் உள்ளன.. இதையொட்டி பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன..

நாளை முதல் ஜனவரி 5 வரை.. இரவு நேர ஊரடங்கு அமல்.. மகாராஷ்டிராவில்.. !நாளை முதல் ஜனவரி 5 வரை.. இரவு நேர ஊரடங்கு அமல்.. மகாராஷ்டிராவில்.. !

மேலும், இந்த புதிய வைரஸ், எந்த வகையை சார்ந்தது என்பது குறித்த ஆராய்ச்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.. இந்த வைரஸ் தொடர்பான புது புது செய்திகள், தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் இணையதளவாசிகள் அதை டிரண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 'COVID20' என்ற ஹேஷ்டேக் மூலம் செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்... இதனால், இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் 'COVID20' என்ற ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.

English summary
#'COVID20' twitter hashtag
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X