ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து.. இன்று இந்தியாவில் 2ஆம் கட்ட மனித சோதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2-ஆம் கட்ட மனித சோதனை இன்று இந்தியாவில் தொடங்குகிறது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பு தயாரிப்புக்கு இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Covishield vaccine human phase 2 to be started today by Pune institute

இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு இந்தியாவில் உள்ள 17 மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் 2ஆம் கட்ட சோதனை இன்று இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த சோதனை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் மூலம் நடைபெறுகிறது. பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று 2ஆம் கட்ட சோதனை தொடங்குகிறது.

டெல்லி எய்ம்ஸ், புனேவில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் உள்ள ராஜேந்திர மெமோரியல் இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், சண்டீகர் முதுகலை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ், கோரக்பூரில் உள்ள நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரில் உள்ள ஜே எஸ் எஸ் அகாதெமி ஆகியவற்றில் இந்த தடுப்பு மருந்தின் மனித சோதனை நடைபெறுகிறது. அதுபோல் 3ஆம் கட்ட பரிசோதனையும் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த மருந்து 1600 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த சோதனையில் 18 வயதுடையவர்கள் பங்கேற்பர். 0.5 மில்லி அளவில் முதல் நாள் மருந்தின் டோஸ் வழங்கப்படும். அதன் பின்னர் 29ஆவது நாள் இரண்டாவது டோஸ் மருந்து அதே அளவில் செலுத்தப்படும்.

இந்த மருந்து டி செல்லை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து சோதனை வழங்கப்படாது. இந்த தடுப்பு மருந்தின் மனித பரிசோதனை பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+