பத்திரிகை வந்துச்சு தான்.. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு போக மாட்டோம்- யெச்சூரி பொளேர்!
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இடதுசாரி தலைவர்கள் போகமாட்டோம் என சிபிஎம் பொலிட் பீரோ (மத்திய குழு) அதிரடியாக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றுகின்றனர்.

இத்திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை உலக பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் ஜனவரி 1-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை நாடு தழுவிய பிரசாரத்தையும் நடத்துகிறது. அத்தனையும் லோக்சபா தேர்தலில் இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜகவின் யுக்தி என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இதனடிப்படையில் டெல்லியில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் இந்த அழைப்பிதழை வழங்கினர்.
இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட நிலையில் சிபிஎம் மத்திய குழு இன்று வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இடதுசாரி தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறோமா? இல்லையா? என இந்த தலைவர்கள் இன்னமும் அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என சிபிஎம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இதேபோல தமிழ்நாட்டில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கும் ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்கவே சாத்தியங்கள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications