13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்- ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழ்நாடு பாஜக மாஜி தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்
ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழ்நாட்டின் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றியவர் சிபி ராதாகிருஷ்ணன். கோவை பாஜகவின் முகமாக இருந்தவர். மத்திய அரசின் அகில இந்திய கயிறு வாரிய தலைவராக உள்ளார். தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி திரவுமுர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கானா-புதுச்சேரி ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டனர். தற்போது மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த கோஷ்யாரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு ஜார்க்கண்ட் ஆளுநரான ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டின் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

லெப். ஜெனரல் திரிவிக்ரம் பிரனாய்க், அருணாச்சல பிரதேச ஆளுநராகவும், அஸ்ஸாம் ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா, இமாச்சல பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த அர்லேகர், பீகார் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த சவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர், ஆந்திரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவர் அப்துல் நசீர்.

13 புதிய ஆளுநர்கள் நியமன விவரம்:
ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்நாயக்- அருணாச்சல பிரதேசம்
லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம்
சிபி ராதாகிருஷ்ணன் - ஜார்க்கண்ட்
ஷிவ் பிரசாத் ஷுக்லா- இமாச்சல பிரதேசம்
குலாப் சந்த் கட்டாரியா- அஸ்ஸாம்
அப்துல் நஸீர்- ஆந்திரா
ஆந்திரா ஆளுநர் .பிஸ்வ பூஷன் ஹரிசந்தன்- சத்தீஸ்கர்
சுஷ்ரி அனுஷியா உய்க்கே - மணிப்பூர்
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து
பீகார் ஆளுநர் பாகு சவ்ஹான்- மேகாலயா
இமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- பீகார்
ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ்- மகாராஷ்டிரா
அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா- லடாக்
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications