துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள்! இந்தியா கூட்டணிக்கு ஷாக்
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்பார்த்தது போலவே, ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சன் ரெட்டிக்கு 315 வாக்குகள் கிடைக்கும் என்று ஜெயராம் ரமேஷ், வாக்குப்பதிவு முடிந்ததும் கூறினார். ஆனால் அதை விட 15 வாக்குகள் குறைவாகவே சுதர்சன் ரெட்டிக்கு கிடைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்களின் சிலர் கிராஸ் வோட்டிங் (cross-voting) போட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.

துணை குடியரசு தலைவராகும் தமிழர்
நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியாக துணை குடியரசுத் தலைவர் பதவி உள்ளது. துணை ஜனாதிபதி என்றும் அழைக்கப்படும் இந்த பதவியில் இருப்பவர்தான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்பை வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்ற எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இன்று (செப். 9) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமாக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
மொத்தம் எத்தனை வாக்குகள்
எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை அறிவித்ததால் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு சபைகளின் எம்.பிக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். லோக்சபாவில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பிக்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் 5 எம்.பிக்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பிக்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பிக்கள் உள்ளனர்.
98.2 சதவீத வாக்குகள் பதிவு
* மொத்தம் 788 எம்பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 767 எம்பிக்கள் வாக்களித்தனர்.
* 98.2 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் 752 வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகின. 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
* தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகளும் கிடைத்துள்ளன.
யாருக்கு எவ்வளவு வாக்குகள்?
* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 425 எம்பிக்கள் ஆதரவு இருந்தது. இது போக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் ஸ்வாதி மாலிவாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே ஆதரவு அளிக்கலாம் என கருதப்பட்டதால் இதையும் சேர்த்தால் 436 வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 16 வாக்குகள் கிடைத்தன.
* இந்தியா கூட்டணிக்கு 324 எம்பிக்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சில சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் முடிவை அறிவிக்காததால் இந்த எண்ணிக்கையில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும் என கணிக்கப்பட்டது.
* ஆனால் இன்று தேர்தல் முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்தியா கூட்டணி அதிர்ச்சி
* இந்தியா கூட்டணிக்கு 300 வாக்குகளே விழுந்துள்ளன. 24 வாக்குகள் குறைவாக விழுந்திருப்பது, இந்தியா கூட்டணி கட்சிகளில் உள்ள பிளவை காட்டுவதாக அமைந்துள்ளது. சில எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பதை இது காட்டுகிறது. இது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications