துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. ஜெகதீப் தன்கர் - மோடி பங்கேற்பு
டெல்லி: நம் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் மாஜி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பிற மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், கூட்டணி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் கடந்த ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்தார். தனது உடல்நலனை குறிப்பிட்டு அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் பாஜகவில் செயல்பட்டார். மகாராஷ்டிரா ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவருக்கு போட்டியாக ‛இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதாகர் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கடந்த 9ம் தேதி நாடாளுமன்றத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் 767 எம்.பிக்கள் வாக்களித்தனர். இதில் 15 வாக்குகள் செல்லாமல் போனது. 13 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் வெற்றி பெற ஒருவர் 377 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
வாக்கு எண்ணிக்கையில் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகளை பெற்றிருந்தார். சிபி ராதாகிருஷ்ணனுக்கு எதிர்பார்த்ததை விட 14 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. அந்த வாக்குகள் ‛இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்களின் வாக்குகளாகும்.
இந்நிலையில் தான் சிபி ராதாகிருஷ்ணன் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஜனாதிபதி திரெளபதி முர்மு, சிபி ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து துணை ஜனாதிபதியான 3வது நபர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு 1952 முதல் 1962ம் ஆண்டு வரை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக இருந்தார். அதன்பிறகு கேஆர் நாராயணன் 1992 ம் ஆண்டு முதல் 1997 ம் ஆண்டு வரை துணை ஜனாதிபதியாக இருந்தார். இவர்களை தொடர்ந்து இன்று சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
துணை ஜனாதிபதியான சிபி ராதாகிருஷ்ணன் முன்னதாக தனது மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து மகாராஷ்டிரா ஆளுநர் பணியை குஜராத் ஆளுநர் ஆச்சாரிய தேவவிரத் கூடுதலாக கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications