"கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன்".. துணை ஜனாதிபதி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் உறுதி
டெல்லி: "எனது கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என பாஜக கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு கூட்டணி தலைவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடைசி மூச்சு வரை
"NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நான் நெகிழ்ச்சியடைகிறேன். எனது கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
என்.டி.ஏ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடியின் பதிவில், "சி.பி ராதாகிருஷ்ணன் தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றால் பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள், தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழகத்தின் அடிமட்டத்தில் அவர் விரிவான பணிகளைச் செய்துள்ளார். எங்கள் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவரை பரிந்துரைக்க என்.டி.ஏ கூட்டணி முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
அமித்ஷாவின் வாழ்த்துச் செய்தியில், "என்டிஏ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். நாடாளுமன்ற உறுப்பினராக, ஆளுநராக உங்களின் பங்கு அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றி உள்ளீர்கள். உங்கள் பரந்த அனுபவமும் ஞானமும் ராஜ்யசபாவின் கவுரவத்தை உயர்த்தும் என நம்புகிறேன். இந்த முடிவுக்காக பிரதமர் மோடியையும், பாஜக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களையும் வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். இது பாஜக மூத்த தலைவரும், ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜக மூத்த தலைவர்களுக்கும் பாஜக தலைவர் நட்டாவுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications