ரொம்ப நாள் ஆசைங்க இது.. ரஜினிகாந்தை சந்தித்த பும்ரா! பார்த்ததும் செய்த செயல்.. தீவிர ரசிகர் போலயே
டெல்லி: தமிழகத்தின் மருமகனான இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது தொடர்பான போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த போட்டோவை தற்போது வெளியிட்டுள்ள பும்ரா தீவிரமான ரஜினி ரசிகர்களையே மிஞ்சும் அளவுக்கு சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இவர் தான். அந்த தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். economy rate of 4.17 என்ற அளவில் மட்டுமே வைத்து அசத்தியிருந்தார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடைசியாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் படம் ஹிட் அடித்தது. இதையடுத்து ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தான் ஜஸ்பிரித் பும்ராவும், நடிகர் ரஜினிகாந்தும் திடீரென்று சந்தித்துள்ளனர். இதுதொடர்பான போட்டோவை ஜஸ்பிரித் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் மொத்தம் 4 பேர் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா தனது மனைவி சஞ்சனா கணேசனுடனும், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் உள்ளனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து சிரித்தபடி எடுத்த போட்டோவை தான் பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த திடீர் சந்திப்பு என்பது மும்பையில் நடந்துள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் பங்கேற்றார். அதேபோல் பும்ரா தனது மனைவியுடன் பங்கேற்றார். அப்போது தான் அவர்கள் 4 பேரும் சந்தித்துள்னர். இந்த சமயத்தில் எடுத்து கொண்ட போட்டோவை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவின் பின்னணி இசையாக அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸான ‛தலைவரு அலப்பறை' என்ற பாடலை இணைத்துள்ளார். மேலும் அந்த பதிவில் பும்ரா, ‛நான் எப்போதும் சந்திக்க விரும்பிய நபரை பார்க்க கிடைத்த வாய்ப்பை மகிழ்ச்சியாக கருதுகிறேன் ' என ஆங்கிலத்தில் எழுதி ‛Fan Boy' ஆக மாறி உள்ளார். இந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழகத்தில் உள்ள ரஜினி மற்றும் பும்ரா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தற்போதைய பதிவில் பும்ரா, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தமிழ் பாடலை பயன்படுத்தி உள்ள நிலையில் அவருக்கும், தமிழகத்துக்கும் இடையே இன்னொரு பந்தம் உள்ளது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா தமிழகத்தின் மருமகன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது பும்ராவின் மனைவி பெயர் சஞ்சனா கணேசன். இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ளார்.
சஞ்சனா கணேசனின் தந்தை பெயர் கணேசன் ராமசாமி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிரா பெண்ணான சுஷ்மாவை திருமணம் முடித்தார். அதன்பிறகு கணேசன் ராமசாமி மகாராஷ்டிராவில் செட்டில் ஆனார். புனேவில் அவர் தனது குடும்பத்துடன் வசிக்க தொடங்கினார். தந்தை தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட சஞ்சனா கணேசன் பிறந்து வளர்ந்தது எல்லாம் புனேவில் தான். இருப்பினும் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் பும்ராவை தமிழகத்தின் மருமகன் என அழைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications