Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எலும்புகளை" பாதி காணோமாம்.. பாத்ரூமிலேயே பெண்ணின் உடலை வைத்து.. நாய் அழற சத்தம் வேற.. நடுங்கும் டெல்லி

சடலத்தை பாத்ரூமில் வைத்து துண்டு போட்டதாக டெல்லி கொலையில் தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஷ்ரத்தாவை கொலை செய்து உடலை, பாத்ரூமில் வைத்து வெட்டியதாகவும், அதற்காக அதிகப்படியான தண்ணீரை அப்தாப் பயன்படுத்தியதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது..!!!

கொலை செய்த பயங்கரத்தைவிட, அந்த கொலைக்கு பின் நடந்த சம்பவங்கள்தான் அதைவிட நடுக்கத்தை பொதுமக்களுக்கு இந்த டெல்லி சம்பவத்தில் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மே 18ம் தேதி இவர்களுக்குள் சண்டை பெரிதாகி விட்டது.. ஷ்ரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தி கூச்சல் எழுப்பியதால், அஃப்தாப்புக்கு ஆத்திரம் அதிகமானது..

தலைகாணி

தலைகாணி

ஷ்ரத்தாவின் வாயையும் மூக்கையும், தலைகாணியை எடுத்து நீண்ட நேரம் அழுத்தியதில், ஷ்ரத்தா துடிதுடித்து இறந்தார்.. இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க அப்தாப் எடுத்துக் கொண்ட முயற்சி, அனைவரையும் உறைய செய்துவிட்டது.. 300 லிட்டர் ப்ரிட்ஜை சடலத்தை மறைக்கவே வாங்கியுள்ளார்... பிறகு, தான் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்.

துர்நாற்றம்

துர்நாற்றம்

அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்... பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.. அப்தாப்பின் சைக்கோ குணத்தை ஏற்கனவே பலமுறை நடந்த சண்டைகளில் பார்த்துதான், தன்னுடைய நண்பர்களிடம் ஷ்ரத்தா கதறிஉள்ளார்.. என்னை இங்கிருந்து காப்பாற்றுங்கள், இல்லாவிட்டால் அவன் என்னை கொன்று விடுவான் என்று சொல்லி அழுதாராம். அந்த நண்பர்கள் தனக்கு எச்சரிக்கை விடுத்ததால், ஷ்ரத்தாவோடு தொடர்பில் இல்லாமல் போயுள்ளதாக அப்தாப் வாக்குமூலம் தந்திருக்கிறான்.

 நைட் நேரம்

நைட் நேரம்

இந்தக் கொலை நாடு முழுவதும், அதிர்ச்சியை கிளப்பி உள்ள நிலையில், அதே குடியிருப்பில் வசிப்பவர்களோ பயத்தில் நடுநடுங்கி போயிருக்கிறார்களாம்.. இப்படி ஒரு பெண், இத்தனை மாதங்களாக, அந்த வீட்டில் இருந்ததே எங்களுக்கு தெரியாது... அந்த பையனை பார்த்திருக்கிறோம்... எங்களுக்கு இப்போவெல்லாம் நைட் நேரத்தில் வெளியே போகவே பயமாக இருக்கு.. யாரோ அழற சத்தம் கேட்குது... ஜுன், ஜூலை மாசத்தில், இந்த அபார்ட்மென்டை சுற்றி நிறைய நாய்கள் ஊளையிட்டு கொண்டே இருந்தன.. அதை நினைச்சாலே எங்களுக்கு கை, கால் உதறல் எடுக்குது என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்...

 லாட்ஜில் ரூம்

லாட்ஜில் ரூம்

வாக்குமூலத்தில் பல விஷயங்களை, அப்தாப் சொன்னாலும், மேலும் பல விஷயங்களை அவன் மறைத்திருக்கலாம் என்கிறார்கள்.. அதனால்தான், உண்மைதன்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.. அப்தாப்பை ஹிமாச்சல பிரதேசத்தின் பார்வதி பள்ளத்தாக்குக்கு அழைத்து செல்ல போகிறார்களாம்.. காரணம், அங்கே மே மாதம் டெல்லிக்கு செல்வதற்கு முன்பு லாட்ஜில் இவர்கள் தங்கியுள்ளனர்... மற்றொருக்கம் ஆதாரங்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

 டிரஸ்ஸை காணோம்

டிரஸ்ஸை காணோம்

ஷ்ரத்தாவின் செல்போனை காணோம்.. உடலை வெட்ட பயன்படுத்திய கத்தியை காணோம்.. உடலின் பெரும்பாலான பாகங்களை காணோம்.. அணிந்திருந்த டிரஸ்ஸை காணோம்.. ஓட்டல் கத்தி சரியாக அறுக்கவில்லையானால் ரம்பம் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.. அதனால் ரம்பத்தையும் தேடிவருகிறார்கள். தன்னுடைய செல்போனை ஓஎல்எக்ஸ்-ல் விற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.. இப்போதைக்கு 13 பாகங்கள்தான் கிடைத்துள்ளதாம்.. தலை உள்ளிட்ட பாகங்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வருவதற்கு எப்படியும் 2 வாரம் ஆகுமாம்..

பாத்ரூம்

பாத்ரூம்

ஆனால், அப்தாப் வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசுவதாகவும், அந்தப் பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதாகவும் ஷ்ரத்தா சந்தேகப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்... எனினும்., கொலை செய்த பிறகும் ஷ்ரத்தாவின் முகத்தை தினமும் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தானாம்.. ஷ்ரத்தாவின் உடலை, பாத்ரூமில் வைத்து வெட்டியதாகவும், அதற்காக அதிகப்படியான தண்ணீரை அப்தாப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது..

 ஃபிளாட் வாட்டர் பில்

ஃபிளாட் வாட்டர் பில்

அப்தாபின் பிளாட்டின் நிலுவையில் உள்ள ரூ. 300 தண்ணீர்க் கட்டணம், அவர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதை நிரூபித்தது.. குறிப்பாக, டெல்லி அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இதன்படி அப்தாப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இதுவரை யாருமே குடிநீர் கட்டணம் செலுத்தியது இல்லையாம்.. இதற்கு பிறகு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தன்னுடைய செல்போனை ஓஎல்எக்ஸ் தளத்திலும் அப்தாப் விற்றுள்ளார்.

 DNA டெஸ்ட்

DNA டெஸ்ட்


இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கடந்த ஜுன் மாதம் டெல்லியில் கண்டெடுக்கப்பட்ட தலை, ஷிரத்தாவின் தலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.. இதுதொடர்பாக மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது... வீட்டுக்கு வேண்டிய பொருள்களை வாங்க யார் பணம் கொடுப்பது என்பதுதான், தகராறாக வெடித்து, இந்த அளவுக்கு கொடூர மரணத்தை நடத்த காரணமாக அமைந்திருப்பது என்பது இந்த கொலையின் வேதனையான விஷயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+