ஆம் ஆத்மி எம்பி தலையை குறி வைத்து கொத்த வந்த காகம்.. காரணம் கண்டுபிடித்த பாஜக.. திக் திக் கலாய்
டெல்லி: நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சியின் இளம் எம்பி ராகவ் சதா குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் வேகமாக பறந்து வந்த காகம் நாடாளுமன்றத்தில் அவரது தலையில் இறகால் அடித்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்ஆத்மி கட்சியின் இளம் தலைவராக இருப்பவர் ராகவ் சதா. இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். தற்போது நடக்கும் நாடாளுமன்ற மழைக்காலகூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார்.

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனை கடுமையாக ராகவ் சதா கண்டித்தார். மேலும் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் சஞ்சய் சிங் எம்பி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஜெகதீப் தன்கர், ‛‛நீங்கள் இளம் எம்பி. நாடாளுமன்றத்தில் செயல்படுவது தொடர்பாக உங்களுக்கு மூத்தவரின் அறிவுரைகள் தேவை''என விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் தான் ராகவ் சதா நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்தார். செல்போனில் பேசியபடி கையில் சில ஆவணங்களை வைத்து கொண்டு அவர் நடந்து சென்றார். அப்போது காகம் ஒன்று பறந்து வந்து இறகால் அவரது தலையில் அடித்துவிட்டு சென்றது. இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
அதனை இணையதளங்களில் பதிவிடும் பாஜக ஆதரவாளர்கள், ‛‛பொய் சொன்னால் காகம் தாக்கும்'' என பதிவிட்டுள்ளனர். அதாவது பொய் சொன்னால் காகம் தாக்கும் என வடமொழியில் கூறுவது உண்டு. இத்தகைய சூழலில் தான் ராகவ் சதா பொய் சொல்லி உள்ளார். அதனால் தான் அவரை காகம் தாக்கி உள்ளதாக பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டோ தற்போது வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications