பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்.. CRPF வீரர் அதிரடி நீக்கம்.. ஏன் தெரியுமா? பரபரப்பு தகவல்
டெல்லி: பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆர்பிஎப் வீரர் முனீர் அகமது அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதற்கு காஷ்மீர் ஆதரவு பயங்கரவாதிகள் தான் முக்கிய காரணம். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட உள்ளது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக சில முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு கையில் எடுத்தது. அதன்படி சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, பாகிஸ்தானியர்களின் சார்க் விசா நிறுத்தம், பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கையை எடுத்தது. அதன்படி 700க்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த நடைமுறை என்பது தொடர உள்ளது.
அந்த வகையில் சிஆர்பிஎப் வீரரான ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முனீர் அகமதுவின் மனைவி மினல் கானையும் நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முனீர் அகமது ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். இவர் 41வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் அவர் பாகிஸ்தானை சேர்ந்த மினல் கானை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு மனைவியை காஷ்மீர் அழைத்து வந்து வசித்துள்ளார்.
இப்போது பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படும் நிலையில் அவரது மனைவியும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து அட்டாரி - வாகா எல்லைக்கு மினல் கான் அழைத்து வரப்பட்டார். எல்லையில் அவர் வந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் 10 நாட்கள் வரை தற்காலிகமாக மினல் கான் நம் நாட்டில் தங்க அனுமதி வழங்கியது. இதையடுத்து மினல் கான் மீண்டும் ஜம்மு காஷ்மீர் திரும்பினார்.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த முனீர் அகமது மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின்போது அவர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ய சிஆர்பிஎப் உயரதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. பொதுவாக பாதுகாப்பு துறை சார்ந்த பணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும்.
ஆனால் முனீர் அகமது நமக்கு எதிரி நாடாக உள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை கரம்பிடித்தாலும் கூட அதுபற்றி முன்கூட்டியே அனுமதியை பெறவில்லை. அதாவது பாகிஸ்தான் பெண்ணை கரம் பிடிக்க முனீர் அகமதுவும் அனுமதி கோரியுள்ளார். ஆனால் அதிகாரிகள் அதனை பரிசீலிக்கும் முன்பாகவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 24ம் மினல் கானுடன் வாட்ஸ்அப் காலில் திருமணம் செய்துள்ளார்.
அதன்பிறகு மினல் கான் வாகா எல்லை வழியாக சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். இந்த விசா காலம் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி காலாவதியானது. அதன்பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என்று போட்ட உத்தரவால் இருவரும் சிக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி மனைவி மினல் கானின் விசா காலாவதியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியுடன் அவரது விசா காலம் முடிவடைந்துள்ளது. அதனை புதுப்பிக்காமல் முனீர் அகமது தனது மனைவியை தன்னுடன் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முனீர் அகமது அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications