டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுலைமானி கொலை.. கச்சா எண்ணெய் விலை கிடுகிடு.. பெட்ரோல்- டீசல் விலை உயரும் அபாயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump warns Iran | ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

    டெல்லி: சுலைமானி அமெரிக்காவில் கொல்லப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை 4 டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல்- டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    அமெரிக்காவின் வான் தாக்குதல் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சுலைமானி ஹஷீத் கிளர்ச்சி குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

    அண்மையில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுக் குழு நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. ஈரான் நாட்டின் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த அமெரிக்க நாடாளுமன்றம், அதிபர் டிரம்பின் உத்தரவின்பேரின் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளது.

    விலை கிடுகிடு

    விலை கிடுகிடு

    கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமான இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்த தாக்குதலுக்கு பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் ஏற்படும் அச்சத்தில் கச்சா எண்ணெயின் விலை திடீரென அதிகரித்துள்ளது.

    63 டாலர்

    63 டாலர்

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திடீரென 4.4 சதவீதம் அதிகரித்து 69.16 டாலராக உயர்ந்துள்ளது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் சந்தையில் 4.3 சதவீதம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து 63.84 டாலராக உயர்ந்துள்ளது.

    மோசமடையும்

    மோசமடையும்

    ப்ரெண்ட் கச்சா கிட்டத்தட்ட 3 டாலர் உயர்ந்து ஒரு பீப்பாய் 69.16 டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையில் பனிப்போர் நிலவி வந்த நிலையில், சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தியாவின் பங்குகள்

    இந்தியாவின் பங்குகள்

    இதை உறுதி செய்யும் விதமாகவே, ஈரான் விடுத்த அறிக்கையில் அமெரிக்கா பேராபத்து விளைவிக்கும் செயலைச் செய்து, முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டது என கூறி உள்ளது. இதனால் இந்தியாவின் பங்குகள் குறைந்தன.

    விலை கிடுகிடு உயரும்

    விலை கிடுகிடு உயரும்

    இரு நாடுகளுக்கு இடையே அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படும். இதனால் பெட்ரோல் டீசல் விலையும் உயரக் கூடும் என தெரிகிறது. மேலும் தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் கிடுகிடுவென உயரும்.

    English summary
    Crude oil price increases as Iran Commander Sulamani killed by Amercian air strike. It will lead to increase in Petrol and Diesel price.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X