வேலையின்மை, விலைவாசியை விடுங்க.. தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்கும் 'ராமர் கோயில்'! ஆய்வில் தகவல்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக அரசு செய்ததில் மக்களுக்கு பிடித்தது எது என்கிற கேள்விக்கு, ராமர் கோயில் கட்டியதுதான் என்று பலரும் பதிலளித்துள்ளனர். லோக்நிதி மற்றும் சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றும் ஒரு வாரத்தில் லோக்சபா தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் அரசியல் கடசிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த தேர்தலின் முக்கியமான பிரச்னைகள், மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து லோக்நிதி மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. தற்போது இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதாவது, ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு செய்ததில் மக்களுக்கு பிடித்தது எது என்கிற கேள்விக்கு, ராமர் கோயில் கட்டியதுதான் என்று 22% பேர் பதிலளித்துள்ளனர். ராமர் கோயிலை கட்டுவது இந்து அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும் என்று 22% பேரில் பாதிபேர் கூறியுள்ளனர். அதிலும் பெண்களை விட ஆண்களே இந்த கருத்தை அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர்.
ராமர் கோயில் இந்து அடையாளங்களை ஒருங்கிணைக்கும் என்று 46% பெண்ககும், 49% ஆண்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாதிவாரியாக பார்த்தால், இந்து உயர் சாதியினரும், அதைத் தொடர்ந்து நடுத்தர வகுப்பினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இக்கருத்தையை வெளிப்படுத்தியுள்ளனர். நகர்ப்புறத்தில் 52% பேரும், கிராமப்புறங்களில் 50% பேரும் இக்கருத்தை பிரதிபலிக்கின்றனர். தேசிய அளவில், கிழக்கும் மற்றும் தென்னிந்திய மக்களைவிட, வட மற்றும் மேற்கு பகுதி மக்கள்தான் ராமார் கோயில் கட்டுதை பெருமளவு வரவேற்றிருக்கின்றனர்.
அதேநேரம் ராமர் கோயில் மத பிளவுகளுக்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ராமர் கோயில் குறித்து பாசிட்டிவாக பதிலளித்தவர்களில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் மதர பிளவு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆய்வின்படி பார்த்தால், ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தினால் அது நல்ல பலனை கொடுக்கும் என்று தெரிவதாக லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் தெரிவித்திருக்கிறது. இல்லையென்றாலும் கூட பாஜக என்பது, இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை ஏற்கெனவே நிலை நிறுத்திக்கொண்டது என்றும் கூறியுள்ளது.
முன்னதாக இந்த தேர்தலில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை குறித்தும் லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வுதான் முதல் இரண்டு பெரிய பிரச்னையாக மக்கள் பார்க்கிறார்கள் என கூறியிருந்தது. ஏற்கெனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்து மத்திய அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், ஆய்வும் இதையே சுட்டிக்காட்டியிருந்தது விவாதங்களை கிளப்பியது.
இருப்பினும், ராமர் கோயில், வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் மூலம் இதனை மாற்ற முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. எப்படி இருப்பினும் இந்த தேர்தல் இரு தரப்பிலும் பலமான போட்டியை உருவாக்கியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications