"ஆபாச படம்.." மத்திய அமைச்சருக்கு வந்த வீடியா கால்.. அடுத்து நடந்த "பகீர்" சம்பவம்! பரபரப்பு
டெல்லி: மத்திய அமைச்சருக்கு வீடியோ கால், வந்த நிலையில், திடீரென அதில் ஆபாசப் படம் ஓட தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது நாம் நவீனமான டிஜிட்டல் யுகத்தில் தான் வசித்து வருகிறோம். இங்கே எல்லாமே இப்போது ஆன்லைன் மயமாகிவிட்டது. டேட்டிங் முதல் சாட்டிங் வரை இப்போது அனைத்தும் செயலி மூலமாகவே நடக்கிறது.
உணவு டெலிவரி இந்தளவுக்கு மிகப் பெரிய சந்தையாக உருவெடுக்கும் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாருமே நினைத்துக் கூட இருக்க மாட்டார்கள். இது நாம் ஹோட்டலில் சாப்பிடும் முறையையே மாற்றிவிட்டது.

தொழில்நுட்பம்: அதிலும் குறிப்பாக இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நாம் சாட் செய்யும் முறையை முற்றிலுமாக தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. கடிதத்தில் இருந்து செல்போனுக்கு நாம் வந்த போதிலும், அப்போது இன்ஸ்டன்ட் மெசேஞ்சிங் என்பது பிரபலமாகவில்லை. வழக்கமான மெசேஞ்சில் ஒரு நாளைக்கு 100 மெசேஞ் தான் அனுப்ப முடியும் என்பது போன்ற சிக்கல்கள் இருந்தன. ஆனால், இணைய வளர்ச்சி இந்தச் சிக்கல்களைச் சரி செய்தது.
இப்போது நாம் யாரை நினைத்தாலும் அவர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடிகிறது. நொடிகளில் வீடியோ கால் கூட பேச முடியும். ஆனால், இதே தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துப் பல ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இவர்கள்.. சத்தமே இல்லாமல் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயைத் திருடுகிறார்கள்.
மத்திய அமைச்சர்: இதுபோன்ற ஹேக்கிங் சம்பவங்களில் சிக்க வேண்டாம் எனப் பலரும் எச்சரித்து வருகிறார்கள். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. யாரோ எதுவும் தெரியாமல் இருப்பவர் இதில் சிக்கினால் ஓகே.. மத்திய அமைச்சர் ஒருவரே இதில் சிக்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா.. மத்திய அமைச்சருக்கு வீடியோ கால் செய்து அவரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.
அதன்படி மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மத்திய அமைச்சருக்குக் கடந்த ஜூன் மாதம் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. வீடியோ கால் தானே என்று எண்ணி, வழக்கம் போல அந்த மத்திய அமைச்சர் போனை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது திடீரென அதில் ஆபாச வீடியோ ஓட தொடங்கியுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர் உடனடியாக காலை கட் செய்துவிட்டார்.
வீடியோ: அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து மற்றொரு கால் வந்துள்ளது.. இந்த முறை வெறும் ஆடியோ கால் மட்டுமே வந்துள்ளது. அந்த மத்திய அமைச்சர் போனை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது எதிர்புறம் இருந்த நபர் பேசிய பேச்சு இவருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அதாவது ஆபாசப் படத்தைப் பார்ப்பது போலச் சித்தரித்து ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவுக்கு பணம் வேண்டும் என்றும் இல்லையென்றால், அந்த வீடியோவை இணையத்தில் லீக் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளான்.

இதைக் கேட்டு முதலில் அந்த அமைச்சர் பதறியுள்ளார். இதையடுத்து அவர் டெல்லி போலீசாரிடம் இது குறித்த புகாரை அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அமைச்சருக்கு வந்த போன்காலை ஆய்வு செய்ததில், அந்த கால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த குற்றவாளி முகமது வக்கீல் மற்றும் முகமது சாஹிப் ஆகியோரை கைது செய்தனர்.
இது குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது.. அவர்கள் யாரை எல்லாம் ஏமாற்றியுள்ளனர் என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஒருவருக்கே போன் செய்து இதுபோல பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலை குறிவைத்துத் தான் இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளது












Click it and Unblock the Notifications