என்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா? டி. ராஜா பாய்ச்சல்
Recommended Video
டெல்லி: வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற மகாராஷ்டிரா மாநில பாஜகவின் தேர்தல் வாக்குறுதியானது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று மும்பையில் வெளியிட்டது.

பாரத ரத்னா விருது
அதில், சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

டி. ராஜா கருத்து
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது: மகாத்மா காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம்.

சாவர்க்கர் குற்றவாளி
மகாத்மாவை படுகொலை செய்த வழக்கில் வீரசாவர்க்கர் ஒரு குற்றவாளி. அந்த வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்துவது மிகப் பெரிய முரண்.

கோட்சேவுக்கும் விருதா?
இன்று சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வேண்டும் என்பார்கள்.. நாளை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொலையாளி கோட்சேவுக்கும் கூட பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவார்கள். இதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு டி. ராஜா கூறினார்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications