இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி ராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லியில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக டி ராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

2012-ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு தேசிய செயலாளராக இருந்த டி ராஜாவை முன்மொழிந்தார்.
இதையடுத்து டி ராஜா அப்பதவிக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications