இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து தினசரி கொரோனா கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 39,543,328 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் புதிதாக 306064 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 489,896 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 36,804,145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,249,287 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் இதுவரை 82,78,658 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 28,286 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 5,16,468 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 76,16,146 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,42,179 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 36 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருகிறது. 2வது அலையில் கேரளா மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது அலையிலும் அங்கு கேஸ்கள் மோசமாக பதிவாகி வருகின்றது. கேரளாவில் இதுவரை 59,28,585 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 45685 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 5,35,519 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 53,44,596 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 5,35,519 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவிலும் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பெங்களூரில் நேற்று 22656 கேஸ்கள் பதிவானது. கர்நாடகாவில் இதுவரை 40,59,146 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 46426
பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 7,06,273 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 33,14,125 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 38,717 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 32 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Omicron in Community Transmission Stage in India, says INSACOG | OneIndia Tamil
    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயர்ந்தாலும் பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 35,23,574 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 30215
    பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,97,030 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 30,89,150 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,394 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 46 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+