வாக்கு திருட்டுக்கு ஆதாரம் இருக்கு.. தலித், சிறுபான்மையினர் ஓட்டுகளே குறி - ராகுல் சொன்னதை பாருங்க
டெல்லி: ‛‛என்னுடைய புகார்கள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் இருக்கும். கர்நாடகாவில் போலி லாக் - இன் முகவரியை பயன்படுத்தி வாக்குகள் திருடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியாக இருக்கும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஓபிசிக்கள் தான் அதிகம் குறிவைக்கப்படுகின்றன. இதனை நாங்கள் பலமுறை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது தான் 100 சதவீத ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளோம்'' என பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி மீண்டும் பரபரப்பாக குற்றம்சாட்டி உள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7 ம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல்,

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடியதாகவும், அதற்க தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும்
கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதன்பிறகு பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டார். செப்டம்பர் 1ம் தேதி அந்த பேரணி
முடிவடைந்தது. அன்றைய தினம் ராகுல் காந்தி கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரைவில் வாக்கு திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை
போடும். அதன்பிறகு பிரதமர் மோடியால் நாட்டு மக்களிடம் முகத்தை கூட காண்பிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தான் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் ராகுல் காந்தி டெல்லி இந்திரா பவன் ஆடிட்டோரியத்தில் இன்று காலை ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போலி லாக்-இன் ஐடிகளை பயன்படுது்தி கர்நாடகாவில் ஆலந்தா தொகுதியில் 6 ஆயிரம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை பலவீனப்படுத்த வாக்காளர் பட்டியிலி் பெயர்களை நீககப்படுகிறது.
இதற்காக சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நான் 100 சதவீத உண்மை மற்றும் ஆதாரம் இன்றி எந்த அறிக்கை, குற்றச்சாட்டை வெளியிடமாட்டேன். நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். ஜனநாயக செயல்முறையை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்.
என்னுடைய புகார்கள் அனைத்தும் சரிபார்க்க கூடிய நிரூபிக்க கூடிய வகையில் ஆதாரங்களின் அடிப்படையில் தான் இருக்கும். நம் நாட்டில் லட்சக்கணக்கான ஓட்டுகளை நீக்குவதற்கு சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். முக்கியமாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் பல்வேறு சமூக மக்கள் குறிவைக்கப்படுகின்றன. தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஓபிசிக்கள் தான் அதிகம் குறிவைக்கப்படுகின்றன. இதனை நாங்கள் பலமுறை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது தான் 100 சதவீத ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளோம்'' என பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி மீண்டும் பரபரப்பாக குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications