மணிப்பூர் விவகாரம்.. 8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 8ஆம் நாள் அமர்வு இன்று கூடிய நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவையும் முடங்கியது. இதனால் நாடாளுமன்றம் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
நமது நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் ஆகிய நேரங்களில் கூடும். ஏற்கனவே நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கியது.
சரியாக இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு தான் மணிப்பூர் குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகியிருந்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கியே வருகின்றனர். சில மசோதாக்கள் மட்டும் எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமல் தாக்கலானது.

அதேநேரம் "இந்தியா" எம்பிக்கள் இணைந்து மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இதன் மீது எப்போது விவாதம் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எப்போது விவாதம் நடத்துவது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மறுபுறம் "இந்தியா" எம்பிக்கள் மணிப்பூர் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளனர். எனவே, அவர்கள் இது குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் எனத் தெரிகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இடையில் சர்ச்சைக்குரிய டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவையும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று நாடாளுமன்றம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட போதிலும், அமளி தொடர்ந்தே வந்தது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications