இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் புதின்.. அமெரிக்காவுக்கு பக்கா ஸ்கெட்ச்! கணக்கு இதுதான்
டெல்லி: உக்ரைன் போருக்கு பின்னர், முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறார். S-400 ஆயுத கொள்முதல், 5ம் தலைமுறை விமானம், எரிபொருள் விற்பனை போன்ற விஷயங்கள் இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சொல்லப்படாத மற்றொரு பிளானை புதின் வைத்திருக்கிறார் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டி-டாலரைசேஷன் என்கிற பிளான்தான் அது. சர்வதேச நாணய வர்த்தகத்தில் 89% டாலரிலேயே நடக்கிறது. எண்ணெய் வர்த்தகமும் பெரும்பாலும் டாலரில்தான் நடக்கிறது. எனவே அமெரிக்கா சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத நாடாக மாறியிருக்கிறது. எந்த நாட்டிலும் ஊடுருவும் பவரை டாலர் பெற்றிருக்கிறது. இதனால், அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் இந்த ஆதிக்கத்தை விரும்பவில்லை.

ஷாக் ஆன அமெரிக்கா
எனவே, டாலருக்கு மாற்று கரன்சியை கொண்டுவர வேண்டும் என்று ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உறுதியாக இருக்கின்றன. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அதாவது ஆசிய நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் வர்த்தகத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளன. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கும்போது, நாம் இந்திய ரூபாயை பயன்படுத்துகிறோம். இரு நாடுகளுக்கிடையேயான சுமார் 90% வர்த்தகம் உள்நாட்டு நாணயங்கள் அல்லது மாற்று நாணயங்களிலேயே நடைபெறுவதாக ரஷ்ய துணைப் பிரதமர் டென்னிஸ் மாண்டுரோவ் கூறியிருந்தார். இது அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
டாலர் VS ரூபாய்
சொந்த நாணயத்தில் வர்த்தகம் என்பது நமது பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறை. உதாரணத்திற்கு அரபு நாடுகளில் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் எனில், டாலரில்தான் பணம் கொடுக்க வேண்டும். இன்றைய தேதியில், ஒரு அமெரிக்க டாலரின் வாங்க வேண்டும் எனில், ரூ.89.89 கொடுக்க வேண்டும். லட்சக்கணக்கான டாலர் வாங்க வேண்டும் எனில், நாம் கோடிக்கணக்கான ரூபாயை கொடுக்க வேண்டி இருக்கும். இது தலையை சுற்றி மூக்கை தொடுகிற கதை.
பொதுவான கரன்சி
நமக்கு மட்டும் கிடையாது சீனா, ரஷ்யா என எல்லா நாடுகளுக்கும் இதேதான் நிலைமை. எனவே, இந்த பிரச்சனையை சமாளிக்க புதிய கரன்சி அவசியம். குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கரன்சி அவசியம். இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா என இருந்த பிரேசில் நாடுகளின் கூட்டமைப்பு, தற்போது எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என விரிவடைந்திருக்கிறது. இந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்ய பொதுவான கரன்சி தேவை.
பிரிக்ஸ் கரன்சி
பாதுகாப்பு ஆயுதங்கள், கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளை நம்மால் 40% வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே இப்போது நாம் டாலரில் செய்யும் செலவுகள் 40% வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி மட்டும் நடந்தால் இந்தியாவில் விலைவாசி அப்படியே குறைந்துவிடும். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் பொதுவான கரன்சியை பயன்படுத்துகிறது எனில், ஆசியா வளர்ச்சியடைந்த கண்டமாக விரைவில் மாறும். சொந்த கரன்சியில் வர்த்தகம் என்பது முதல் படி. இதன் இறுதி இலக்குதான் பிரிக்ஸ் கரன்சி.
இந்தியாவின் பதில்
ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். டாலரை தவிர்த்துவிட்டு, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இப்படியெல்லாம் பேசினால் வேலைக்கே ஆகாது. இந்தியா இந்த விஷயத்தில் துணிந்து முடிவெடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் புதின் பேசுவார். அதற்கு இந்தியாவின் பதில் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications