இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்கா.. ஜெய்சங்கரிடம், ரூபியோ சொன்ன தகவல்.. பாகிஸ்தானுக்கு விழும் அடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்கா நம் நாட்டுடன் கைகோர்த்துள்ளது. இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

deeply-appreciate-us-commitment-to-work-with-india-in-the-fight-against-terrorism-says-jaishankar-a

பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதற்கிடையே தான் இன்று இரவு ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. இதனை நம் நாடு வெற்றிகரமாக தடுத்து முறியடித்தது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு, நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து மோதல் வலுத்துள்ளது.

இந்த மோதலுக்கு நடுவே தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான பதற்றம் பற்றி கேட்டறிந்தார். மேலும் தாக்குதலை நிறுத்தும்படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெய்சங்கர், பாகிஸ்தான் சீண்டினால் நிச்சயம் பதிலடி இருக்கும். அதில் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்கா சார்பில் பாகிஸ்தான் உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசியது குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவவலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இன்று மாலையில் பேசினேன். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுடன் கைகோர்த்து செயல்படுவதற்கான அமெரிக்காவின் உறுதியை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் பற்றி விளக்கமளித்தேன். மேலும் எத்தகைய தாக்குதல் முயற்சிக்கும் பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என்றும் கூறினேன்'' என என்று தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+