பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கு.. பிபிசிக்கு டெல்லி நீதிமன்றம் புதிய சம்மன்.. வழக்கின் பின்னணி என்ன?
டெல்லி: பாஜக நிர்வாகி பினய் குமார் சிங் தொடுத்த அவதூறு வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஊடக நிறுவனமான பிபிசிக்கு டெல்லி ரோஹினி நீதிமன்றம் புதிய சம்மனை அனுப்பியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. India: The Modi Question என்ற பெயரில் 2 ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் பிரதமர் மோடியை, குஜராத் கலவரத்துடன் தொடர்புப்படுத்தி இருந்தது. 2ம் பகுதி என்பது டெல்லி வன்மறை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவை பற்றி கேள்வி எழுப்பும் வகையில் இருந்தது.

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் தடையை மீறி பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் இந்திய அரசை விமர்சித்தன. இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி பிபிசி நிறுவனத்துக்கு எதிராக டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாஜகவின் பினய் குமார் சிங் தாக்கல் செய்தார். ஜார்கண்ட் மாநில பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கும் இவர் தனது மனுவில், பிரதமர் மோடி ஆவணப்படம் மூலம் பிபிசி நிறுவனம், பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் குறித்து அவதூறு பரப்புகிறது.
இதுதொடர்பாக பிபிசி, விக்கிமீடியா (விக்கிப்பீடியாவின் துணை நிறுவனம்), இண்டர்நெட் ஆர்ச்சிவ் ஆகிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிபிசி, விக்கிமீடியா ஃபவுண்டேஷன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் லைப்ரரி நிறுவனமான இண்டர்நெட் ஆர்ச்சிவ் ஆகிய நிறுவனங்களுக்கு புதிதாக சம்மன் விடுத்து உத்தரவிட்டது.
வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ளவை என்பதால் மத்திய சட்ட அமைச்சகம் மூலம் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் நவம்பர் 18 ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக இந்த வழக்கு கடந்த மே 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது இரண்டு நிறுவனங்களின் சார்பாகவும் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் தங்களுக்கு நோட்டீஸ் சரியான முறையில் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தனர். மேலும் தங்கள் நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு இந்த நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் வாதிட்டனர்.
-
மாஸ் லீடர்.. அண்ணாமலை பிம்பம் உடைந்ததா? எந்த தொகுதியா இருந்தால் என்ன? வென்று காட்ட முடியாதா? -
அவிநாசியில் முருகன்.. மத்திய அமைச்சராகும் மலை? ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு! -
“எடப்பாடி உடன் சேர்த்து வைத்தது பாஜக தான்.. எல்லாம் அமித் ஷா முயற்சியால் நடந்தது” - டிடிவி தினகரன் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே












Click it and Unblock the Notifications