Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! ரெடியாகும் இந்தியா! பிரதமர் மோடியுடன் அடுத்தடுத்து நடக்கும் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் உறுதியாக மத்திய அரசு உள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த இரு தினங்களாக விமானப்படை தளபதி, கடற்படை தளபதியை சந்தித்து பேசினார். இன்று பாதுகாப்புத்துறை செயலரையும் மோடி சந்தித்து இருக்கிறார்.

இந்தியாவின் வடகோடியில் உள்ள ஜம்மு காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதற்காக பஹல்காம் வந்திருந்தனர். அப்போது அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் இருந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

defense-secretary-meets-prime-minister-modi-amid-india-pakistan-tensions

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வணிகம்-இறக்குமதிகளுக்கு தடை, பாகிஸ்தான் நாட்டு கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை என அடுத்தடுத்து அதிரடிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதேபோல எல்லையில் பாதுகாப்பு படைகளையும் தயார் செய்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கும் முழு சுதந்திரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு அஞ்சி நடுங்கியுள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக கண்டபடி பேசி வருகிறது. சிந்து நதியில் நீரை நிறுத்தினால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ அடாவடியாக பேசினார். அதேபோல, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்ற ரீதியிலும் மிரட்டி வருகிறது.

பாதுகாப்புத் துறை செயலருடன் சந்திப்பு

ஆனால், பாகிஸ்தானின் இந்த மிரட்டல்களை பொருட்படுத்தாத இந்தியா, பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் தீர்க்கமாக உள்ளது. தொடர்ச்சியாக பிரதமர் மோடி பாதுகாப்பு படை உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வருகிறார். நேற்று முன் தினம், கடற்படை தளபதி தினேஷ் திரிபாதியை சந்தித்தார். அப்போது அரபிக்கடலின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கடற்படையின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் தினேஷ் திரிபாதி எடுத்துரைத்தார்.

இதையடுத்து, விமானப்படை தளபதி அமர்பீரீத் சிங்கை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் இருந்தார். இந்த நிலையில், பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

அடுத்தடுத்து சந்திப்புகள்

இந்த சந்திப்பு குறித்து வேறு தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. கடற்படை தளபதி, விமானப்படை தளபதியை சந்தித்த 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்புத்துறை செயலாளரை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தண்டனை இருக்கும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+