இதுதான் விதியா? நொடியில் வாலிபர் உயிரை பறித்த ஏசி! 2வது மாடியில் இருந்து தலையில் விழுந்தது எப்படி?
டெல்லி: டெல்லியில் வீட்டு முன்பு ஸ்கூட்டரில் நின்று பேசி கொண்டிருந்த இளைஞரின் தலையில் 2வது மாடியில் இருந்து பறந்து வந்த ஏசி விழுந்தது. இதில் நிலைக்குலைந்துபோன இளைஞர் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லி டோரிவாலன் பகுதியை சேர்ந்தவர் ஜிதேஷ் (வயது 18). இவரது நண்பர் பெயர் பிரான்சு (17). இவர் டெல்லி படேல் நகரை சேர்ந்தவர். இந்நிலையில் தான் நேற்று காலையில் ஜிதேசும், பிரான்சும் அங்குள்ள வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர்.
ஜிதேஷ் ஸ்கூட்டரில் அமர்ந்து படி பிரான்சிடம் பேசி கொண்டிருந்தார். சில நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு ஜிதேஷ் நேரம் ஆகிவிட்டது எனக்கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

இதையடுத்து பிரான்சு, ஜிதேசை கட்டியணைத்து வழியனுப்ப முயன்றார். ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த ஜிதேசை, பிரான்சு கட்டியணைத்தார். அதன்பிறகு பிரான்சு அவரை விட்டு விலகிய அடுத்தநொடி மேலிருந்த ஏசிக்கான அவுட்டோர் யூனிட் பொத்தென மின்னல் வேகத்தில் கீழே விழுந்தது.
அந்த ஏசி அவுட்டோர் யூனிட் நேரடியாக ஸ்கூட்டரின் மீது அமர்ந்திருந்த ஜிதேசின் தலையில் விழுந்தது. இதில் ஜிதேஷ் நிலைக்குலைந்துபோனார். ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த அவர் தவறி கீழே விழுந்தார். அதேபோல் அருகே நின்ற பிரான்சும் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜிதேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேவேளையில் காயமடைந்த பிரான்சுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தேஷ்பாண்டு குப்தா போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் 2வது மாடியில் இருந்து ஏசி அவுட்டோர் யூனிட் மின்னல் வேகத்தில் கீழ்நோக்கி ஜிதேஷின் தலையில் விழுவது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications