35 பீஸ்! கதறிய "அனுபமா".. 2010ல் நடந்த கொலைக்கும்.. டெல்லி கொலைக்கும் என்ன தொடர்பு? விக்கித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கொலைகாரன் அப்தாப் அமீனுக்கும், 2010ல் நடந்த அனுபமா கொலைக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது.

2010ல் இந்தியாவையே உலுக்கிய கொலைதான் அனுபமா குலாட்டி கொலை. இந்த பெண்ணை ராஜேஷ் என்பவர் 1998ல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக 2006ல் இருந்து இவர்கள் டெஹ்ராடூனில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் 2010ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

மோதல்

மோதல்

இந்த மோதலில் அனுபமா குலாட்டி தலையில் ஓங்கி அடித்து தாக்கி உள்ளார் ராஜேஷ். இதையடுத்து அனுபமா குலாட்டி உயிருக்கு துடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அனுபமா குலாட்டி தலையில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்து இருக்கிறார் ராஜேஷ். அதன்பின் அனுபமா குலாட்டி உடலை எந்திரத்தை வைத்து 40 துண்டுகளாக வெட்டி உள்ளார். இதை அதன்பின் பிரிட்ஜில் வைத்து இருக்கிறார்.

 எத்தனை நாட்கள்

எத்தனை நாட்கள்

அதன்பின் 20 நாட்கள் அனுபமா குலாட்டி உடலை சிறு சிறு பாகங்களாக தினமும் தூக்கி காட்டிற்குள் வீசி உள்ளார். அதன்பின் இரண்டு மாதங்களாக ராஜேஷ் போலீசிடம் மாட்டவில்லை. இதையடுத்து அனுபமா குலாட்டியின் அண்ணனுக்கு இதில் சந்தேகம் வந்துள்ளது. அனுபமா குலாட்டி 2 மாதமாக பேசவில்லை என்றதும் அவரின் அண்ணனுக்கு சந்தேகம் வந்துள்ளது. அனுபமா குலாட்டியின் வீட்டில் சென்று பார்த்தாலும் அவள் இல்லை.

 போலீஸ்

போலீஸ்

இதையடுத்து போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீஸ் நடத்திய விசாரணையில்தான் இந்த கொலை குறித்து தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேசுக்கு 2007ல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பற்றிதான் டெல்லியில் காதலியை கொலை செய்த அப்தாப் இணையத்தில் படித்து இருக்கிறான். சாரதாவை கொலை செய்யும் முன் இந்த வழக்கு பற்றி தீவிரமாக படித்து இருக்கிறான். ராஜேஷ் செய்த தவறுகளை செய்ய கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்துள்ளான். அவன் போனில் இந்த சர்ச் ஹிஸ்டரி இருந்ததை பார்த்து போலீசார் விக்கித்து போய் உள்ளனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறார். முதல் டேட்டிங்கிலேயே இவர்கள் காதலில் விழுந்து உள்ளனர். இரண்டு பேரும் மும்பையில் இருந்ததால் அடிக்கடி சந்தித்துக்கொண்டுள்ளனர். அதன்பின் இவர்கள் டெல்லிக்கு ஓடிப்போய் ஒன்றாக லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.

கொலைக்கான காரணம்

கொலைக்கான காரணம்

இந்த நிலையில்தான் சாரதா அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அப்தாப் அமீன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து நடந்த சண்டையில் சாரதாவை கொலை செய்து இருக்கிறார் அப்தாப் அமீன். அதோடு 35 பாகங்களை உடலை வெட்டி, பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். இதற்காக போலீசில் அப்தாப் அமீன் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது டெல்லியை உலுக்கி உள்ளது. 5 மாதங்களாக போலீசில் சிக்காமல் இவர் சுற்றிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+