சூடு தண்ணி..ப்ளீச்சிங் பவுடர் ஏன்? காதலியை 35 துண்டாக வெட்டிய "அப்தாப்".. வாக்குமூலத்தால் போலீஸ் ஷாக்
டெல்லி: டெல்லியில் நடந்த சாரதா கொலை வழக்கு இந்தியாவையே உலுக்கி உள்ளது. காதலி சாரதாவை காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.
இந்த உடல் பாகங்களை மெஹ்ரவுளி காட்டு பகுதியில் 18 நாட்களாக வீசி இருக்கிறான் அப்தாப் அமீன். இடைப்பட்ட நாட்கள் அந்த உடல் பாகங்களை தனது வீட்டில் புதிய பிரிட்ஜ் வாங்கி அதில் அடைத்து வைத்திருந்திருக்கிறான். இந்தியாவையே இந்த கொலை உலுக்கி உள்ளது. இதில் போலீசார் இன்னும் விசாரணையை முடிக்கவில்லை. மரணம் தொடர்பாக இன்னும் சில மர்மங்கள் நிலவி வருகிறது.
கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போலீசிடம் சிக்காமல் சுதந்திரமாக அப்தாப் சுற்றி வந்துள்ளான். தனது மகள் சாரதாவை காணவில்லை என்று சாரதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் கடைசியில் அப்தாப் கைது செய்யப்பட்டான்.

மறுப்பு
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறான். முதல் டேட்டிங்கிலேயே இவர்கள் காதல் விழுந்து உள்ளனர். இரண்டு பேரும் மும்பையில் இருந்ததால் அடிக்கடி சந்தித்துக்கொண்டுள்ளனர். அதன்பின் இவர்கள் டெல்லிக்கு ஓடிப்போய் ஒன்றாக லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் சாரதா அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அப்தாப் அமீன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து நடந்த சண்டையில் சாரதாவை கொலை செய்து இருக்கிறார் அப்தாப் அமீன். அதோடு 35 பாகங்களாக உடலை வெட்டி, பிரிட்ஜ்ஜில் வைத்து 18 நாட்களாக உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். அப்தாப்பிடம் இதுவரை நடத்திய விசாரணையில், அவர் ஒரு சீரியல் கொலையாளியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொடூரம்
அப்தாப் அமீன் போலீஸ் விசாரணையில் வேறு சில அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி சாரதாவை கொலை செய்த மறுநாளே டேட்டிங் ஆப் ஒன்றை அப்தாப் இன்ஸ்டால் செய்துள்ளார். இந்த ஆப் மூலமாக ஏற்கனவே சில பெண்களிடம் அவர் பேசி வந்துள்ளார். அதில் அடிக்கடி பேசும் பெண் ஒருவரை வீட்டிற்கும் வர சொல்லி இருக்கிறார். முதலில் இந்த கொலையை அப்தாப் கடுமையாக மறுத்துள்ளார். நான் கொலையே செய்யவில்லை என்று மறுத்து வந்துள்ளார். அதையடுத்து போலீஸ் தீவிர விசாரணை செய்த பின் கொலை செய்ததை ஒருவழியாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

வாக்குமூலம்
இதில்தான் முக்கியமான அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ஒன்றை அப்தாப் பகிர்ந்து இருக்கிறான். அதன்படி, சாரதா உடலை புதிய கத்தியை வைத்து 35 பாகங்களாக அப்தாப் வெட்டி இருக்கிறார் . இந்த உடல் பாகங்கள் வேகமாக சுருங்க வேண்டும். அப்போதுதான் அதை பிரிட்ஜ்ஜில் வைக்க முடியும். பின்னர் சிறிய பேக்கில் வைத்து எடுத்து செல்ல முடியும். அதேபோல் ரத்தமும் வடியாமல் இருக்கும். இதனால் அப்தாப் இணையத்தில் என்ன செய்வது என்று படித்து உள்ளார். அதில்தான் பிளிச்சிங் பவுடர் குறித்து அவனுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுடுதண்ணியில் பிளிச்சிங் பவுடரை கரைத்து உள்ளார். அதில் கடைசியில் உடல் பாகங்களை போட்டு ஊற வைத்து உள்ளார்.

ஊறியது
ஒரு இரவு முழுக்க உடல் பாகங்கள் அங்கேயே ஊறி உள்ளது. 20 ஆயிரம் லிட்டருக்கு அதிகமான தண்ணீரை இவர் பயன்படுத்தியது போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உடல் உறுப்புகளை மிருதுவாக்க இப்படி செய்ததாக அப்தாப் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இந்த வழக்கில் இன்னும் சில குழப்பங்கள் நிலவுகிறது. . ஆனாலும் வெறுமனே வாக்குமூலங்கள் மட்டும் கொலையாளிக்கு தண்டனையை வாங்கி கொடுக்காது. கொலை செய்ததை போலீசும் நிரூபிக்க வேண்டும். குறிப்பாக சாரதாவின் தலை இன்னும் கிடைக்கவில்லை. சாரதாவை வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இன்னும் கிடைக்கவில்லை. சாரதாவின் உடை. கொலைகாரன் அப்தாப்பின் உடை. குப்பை தொட்டியில் போட்டதாக அப்தாப் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் கண்டுபிடிக்கப்படவில்லை. சாரதாவின் போன் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். இது போக அப்தாப்பை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்னும் ஓரிரு தினங்களில் கொலையாளி அப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications