அபாய நிலையை எட்டிய டெல்லி காற்று மாசு.. பிப்ரவரி வரை ரெட் அலர்ட்.. அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: காற்று மாசு பிரச்சனை தலைநகர் டெல்லியை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் வருகிறது. மறுபக்கம் மாசு அதிகரிப்பால் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. காற்று மாசு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் அலுவலகங்களிலும், மீதி பேர் வீடுகளில் இருந்தும் பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. டெல்லி முழுவதும் புகைமூட்டமாக இருப்பதால் மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகிறார்கள். ஊர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காற்றின் தரக்குறியீடு 350ஐ தாண்டியுள்ளது. இதனால் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு பிரச்சனையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி காற்று மாசு போராட்டம்
இதற்கு எதிராக மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறை தடியடி நடத்தி தான் கலைத்தனர். காவல்துறை மீது பெப்பர் ஸ்ப்ரே வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நக்சலைட்ஸ், மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டதாக புகார் எழுந்துள்ளது. காற்று மாசு பிரச்சனையில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி காற்று தரநிர்ணய மேலாண்மை ஆணையம் பரிந்துரைப்படி, காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பள்ளி குழந்தைகளை மைதானங்களில் விளையாட அனுமதிக்க கூடாது, பீக் ஹவர்ஸ்களில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் காற்று மாசு குறைப்பது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அலுவலக நேர மாற்றங்கள்
டெல்லியில் பதிவு செய்யப்பட்ட 2.97 கோடி வாகனங்களில் 37 சதவீதம் அதிக வாயுவை உமிழும் பழைய வாகனங்களே இயங்கி வருகின்றன. எனவே மக்கள் அதிகளவு மின்சார வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வாகன பயன்பாடு தொடர்பாக அங்கு பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அலுவலக நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.மருத்துவமனை, தீயணைப்பு, குடிநீர் விநியோகம், மின்சாரம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
வெளியான அறிவிப்பு
டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மணிஜிந்தர் சிங் சிர்சா," டெல்லி காற்று மாசு அபாய நிலையை எட்டியுள்ளதால் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை வருகிற பிப்ரவரி மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது. டெல்லி மாநகராட்சி, அரசுத்துறை அலுவலக நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் எந்த பொருளையும் எரிக்க வேண்டாம். அரசின் அறிவிப்புகளை பின்தொடர்ந்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications