காற்று மாசு.. கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு எதிராக போராட்டம்! மாணவர்கள் கைது
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்தக்கோரி மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லி போலீசார் மாணவர்களை கைது செய்திருக்கின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சுத்தமான காற்றை உறுதி செய்ய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டு இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பவ்ரீன் கந்தாரி, "அதிகாரிகளை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். முதலமைச்சருடன் சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தோம், ஆனால் மறுக்கப்பட்டது. பல பெற்றோர்கள் இங்கு வந்துள்ளார்கள், ஏனெனில் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். காற்று மாசு காரணமாக டெல்லியில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் குழந்தைகளை விட இவர்கள் சுமார் 10 ஆண்டுகள் குறைவாக வாழ்கிறார்கள்" என்று
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இது குறித்து கூறுகையில், "ஒரு காலத்தில், டெல்லி ஒரு பசுமையான தலைநகராக மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. இன்று, இது உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. அரசியல்வாதிகள் பொறுப்பேற்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
காற்றின் தரத்தை அறிந்து கொள்ள காற்று மாசு குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீடு 500ஐ தொடும் போது அந்த பகுதியில் காற்று கடுமையான அளவுக்கு மாசடைந்திருக்கிறது என்று அர்த்தம். டெல்லியை பொறுத்தவரை, காற்று மாசு 600ஐ தொட்டிருக்கிறது. எனவே டெல்லி பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் கூறுகையில்,
"எங்களது போராட்டம் அமைதியானது. மோசமடைந்து வரும் சூழல் குறித்து அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை மக்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இந்தப் போராட்டம்" என்று கூறியிருக்கின்றனர்.
மறுபுறம் ஆம் ஆத்மி தலைவர் பிரியங்கா கக்கர், "ரேகா குப்தா 13 ஏர் பியூரிஃபையர்களை ஆர்டர் செய்துவிட்டு தனது அலுவலக வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கிறார் - அவர் இங்கு வந்திருக்க வேண்டும். இது மக்கள் கோபம். ஏனெனில் பாஜக அரசாங்கம் மாசுபாட்டை சரிசெய்ய ஒரு சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லை, இந்த முறை அனைவருக்கும் தெரியும். பாஜக அரசாங்கம் தரவுகளைத் திரிக்காமல் மக்களுடன் களத்தில் இருந்திருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்திருக்கும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications