டெல்லி ஏர்போர்ட்டில் இரு விமானங்கள் மோதல்.. இறக்கை பகுதி சேதம்! அதிர்ந்த பயணிகள்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானம் மீது டாக்ஸிங் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதியது. இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் இறக்கை சேதம் சேதம் அடைந்தது. லேசான இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.
டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஆகாஷா விமானம் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் இறக்கை முற்றிலும் சேதம் அடைந்தது. இன்று பிற்பகல் 2.15 மணியளவில், ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று டாக்ஸிங் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆகாஷா விமானம் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் வலது பக்க இறக்கை பகுதியும், ஆகாசா விமானத்தின் பின்பக்கமும் சேதம் அடைந்தன.
லே நகரில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், கேட் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டதாகவும், அதே நேரத்தில் ஆகாஷா விமானத்தை ஐதராபத்திற்கு இயக்குவதற்காக நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து எடுத்து செல்ல முற்பட்ட சமயத்தில் இந்த விபத்து நேரிட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஐதராபாத் செல்ல இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்து வருகிறோம் என்று ஆகாஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்து பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications