டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி 2-வது வேட்பாளர் பட்டியல்- 3 முறை வென்ற தொகுதியை கைவிட்ட மணீஷ் சிசோடியா!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் 2-வது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே 11 பே கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருந்தது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சிக்கு இந்த தேர்தல் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான பாஜக முழு முனைப்பில் இருந்து வருகிறது.

டெல்லியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் இப்போது இருந்த இடமே தெரியாமல் அழிந்து போய் கிடக்கிறது. இந்தியா கூட்டணியைப் பயன்படுத்தி ஆம் ஆத்மியுடன் கை கோர்க்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் உஷாராகிவிட்ட ஆம் ஆத்மி கட்சியோ, காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் களத்தில் ஐ பேக் அமைப்பு களமிறங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மிக்கு வியூகம் வகுத்து கொடுத்தது ஐ பேக் நிறுவனம்தான். இந்த தேர்தலுக்கும் ஐ பேக் நிறுவனத்தை நம்பி இருக்கிறது ஆம் ஆத்மி.
இதனிடையே டெல்லி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 11 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டு தேர்தல் பணிகள முழு வீச்சில் தொடங்கியது. இந்த நிலையில் 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஆம் ஆத்மி கட்சி இன்று 20 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஜங்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். பத்பரங்கஞ்ச் (Patparganj) தொகுதியில் ஆவாத் ஓஜா போட்டியிடுகிறார்.
2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் மணீஷ் சிசோடியா பத்ரபங்கஞ்ச் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் தொகுதி மாறி ஜங்புரா தொகுதியில் களம் காண்கிறார் மணீஷ் சிசோடியா.


-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications