Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைநகரை மேலும் சூடாக்கும் தேர்தல் களம்! பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல்! வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தேதி இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்ட சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. ஏற்கனவே அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிறைக்குச் சென்றார்.

election commission delhi assembly election 2025 erode by-poll 2025

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சராக அதிஷி இருக்கிறார். வரும் பிப்ரவரி மாதத்துடன் டெல்லி சட்டசபை பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

டெல்லி தேர்தல்:

இதை அடுத்து அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. டெல்லி சட்டசபை தேர்தலை பொருத்தவரை இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் தனித் தனியாக தேர்தலை சந்திக்கின்றன. மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி பிளவு பட்டிருக்கும் நிலையில் தலைநகரான டெல்லியிலும் இந்தியா கூட்டணி உடைபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி - பாஜக:

பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்சி வருகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என கூறலாம். 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்ததோடு பல திட்டங்களையும் அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலையும், பாஜக 30 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறது.

பாஜக தீவிரம்:

மேலும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லியில் அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி போராடி வரும் நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்ட பணிகளையும் புதிய கட்டிடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தேர்தல் தேதி அறிவிப்பு:

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பு:

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தலில் பதிவான வாக்குகள் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறினார் மேலும் வேட்பு மனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+