டெல்லி: 344 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக- 42,477 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த ஆம் ஆத்மி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்தன் குமார் ஆம் ஆத்மி வேட்பாளரை வெறும் 344 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்; ஆம் ஆத்மியின் முகமது இக்பால், பாஜக வேட்பாளரை 42,724 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் மிக குறைவான- சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:



- சங்கம் விஹார் தொகுதியில் பாஜகவின் சந்தன் குமார், ஆம் ஆத்மி வேட்பாளர் தினேஷ் மோகனியாவை 344 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- இதற்கு அடுத்ததாக திரிலோக்புரி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் ரவி காந்த், ஆம் ஆத்மியின் அஞ்சனா பார்சாவை 392 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
- ஜங்க்புரா தொகுதியில் பாஜகவின் திரிவேந்தர் சிங் மார்வா, ஆம் ஆத்மி மூத்த தலைவரான முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 675 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
- திமார்பூர் தொகுதியில் பாஜகவின் சூரிய பிரகாஷ் காத்ரி, ஆம் ஆத்மியின் சுரீந்தர் பால் சிங்கை 1,168 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

டெல்லி தேர்தலில் மிக அதிகபட்சமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள்
- மாதியா மஹால் தொகுதியில் ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஆலே முகம்மது இக்பால் 42,724 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் தீப்தி இந்தோராவை தோற்கடித்தார்.
- சீலாம்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சவுத்ரி சுபைர் அகமது, பாஜகவின் அனில் குமார் சர்மாவை 42,477 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
- பாஜகவின் மூத்த தலைவரான விஜேந்தர் குப்தா, ரோஹினி தொகுதியில் ஆம் ஆத்மியின் பிரதீப் மிட்டலை 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
- தியோலி தொகுதியில் ஆம் ஆத்மியின் பிரேம் சவுகான், 36,680 வாக்குகள் வித்தியாசத்தில் லோக் ஜனசக்தியின் தீபக் தன்வாரை தோற்கடித்தார்.
- பவானா தொகுதியில் பாஜகவின் ரவீந்தர் இந்த்ராஜ் சிங், ஆம் ஆத்மியின் ஜெய் பகவான் உப்காரை 31,475 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.











Click it and Unblock the Notifications