டெல்லி தேர்தல்: போலி வீடியோவை ஷேர் செய்த அமித்ஷா.. பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை கோரும் ஆம் ஆத்மி
Recommended Video
டெல்லி: டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலியான வீடியோக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா 48 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 11-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

டெல்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்று மத்திய அமைச்சர்கள் பலரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மத்திய அமைச்சர்களின் பிரசாரங்கள் சர்ச்சைகளையும் கிளப்பி வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் டெல்லி ஆம் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங் மற்றும் பங்கஜ் குப்தா ஆகியோர் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலியான வீடியோ ஒன்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் டெல்லி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பாஜக எம்.பி.க்கள் கவுதம் காம்பீர், பர்வேஷ் வர்மா மற்றும் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோரும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். ஆகையால் உள்துறை அமைச்சர் அமித்ஷா 48 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். பாஜக எம்.பி.க்கள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் 1 மாதத்தில் தமது தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதிகளை இடித்து தள்ளுவோம் என பேசியிருந்தார். இதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்துவோரை சுட்டுத் தள்ள வேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications