டெல்லி தேர்தல்.. வெளியான லேட்டஸ்ட் சிவோட்டர் சர்வே.. கெஜ்ரிவால் ஹேப்பி!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலை மையமாக கொண்டு அரசியல் சூடு அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனை போட்டி நடைபெற்றாலும், ஆட்சியை பிடிப்பது ஆம் ஆத்மியா, பாஜகவா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில்தான், டெல்லி சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

சிவோட்டர் மற்றும் ஸ்நாப் போல் (cvoter snap poll survey) வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவில் கெஜ்ரிவால் ஹேப்பியாகும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஷயம் இதுதான்.. அந்த கருத்துக் கணிப்பில் ஆட்சியை மாற்ற விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டது. 45% மக்கள் அரசு மாற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், 51% மக்கள் ஆம் ஆத்மி அரசு தொடர விரும்புகிறார்களாம். இது ஜனவரி 15ம் தேதி எடுத்த கருத்துக் கணிப்பாகும். ஜனவரி 6ம் தேதி எடுத்த கணிப்புடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது.
சிவோட்டரின் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், "முன்பு காங்கிரஸ் வாக்குகள் குறைந்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு அது செல்லும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இம்முறை பாஜகவிற்கும் சில ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது." என்று தாமரை கட்சி மகிழ்ச்சியடையும் சேதியையும் சேர்த்தே சொல்லியுள்ளார்.
'ஆம் ஆத்மி' கட்சியின் ஸ்டார் பிரசாரகர்களாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் ஆதிதி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் களம் கண்டுள்ளனர். இது தவிர
40 பேர் கொண்ட பிரசாரக் குழுவில் உள்ளோர்:
- பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங்
- முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிஸோடியா
- அமைச்சர் சௌரப் பரத்வாஜ், கோபால் ராய்
டெல்லி சட்டசபைத் தேர்தல்:
- வாக்குப்பதிவு: பிப்ரவரி 5
- வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
- முதன்மை போட்டி: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications