அடேங்கப்பா.... ஆம் ஆத்மியிடம் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு டெல்லி பாஜக தடாலடி நோட்டீஸ்
டெல்லி: டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியை கிண்டலடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியிடம் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும் ஆட்சியை எப்படியாவது பிடிக்க பாஜகவும் மும்முரம் காட்டுகின்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மியின் பிரசார பாடல் ஒன்றுக்கு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி நடனம் ஆடுவது போல ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. ஆம் ஆத்மியினர் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்டனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மனோஜ் திவாரி, என்னுடைய வீடியோவை வைத்து இப்படி தவறாக சித்தரிக்க ஆம் ஆத்மிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என கோபம் அடைந்தார். அத்துடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கேலி செய்யும் வீடியோவையும் பாஜக வெளியிட்டது.
இந்நிலையில் ஆம் ஆத்மி மீது தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் திவாரி புகார் கொடுத்துள்ளார். மேலும் ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆம் ஆத்மிக்கு டெல்லி பாஜக நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
களைகட்டுகிறது களம்!
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications