பின்னடைவில் இருந்த டெல்லி முதல்வர் அதிஷி.. சட்டென மேலே வந்து.. கடைசி கட்டத்தில் வெற்றி.. ட்விஸ்ட்
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், கல்காஜியில் போட்டியிட்ட முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஸ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் அதிஷி. புது டெல்லியில் கெஜ்ரிவால், ஜங்புராவில் மணீஸ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
டெல்லி கல்கஜி சட்டசபை தொகுதியில் முதல்வர் அதிஷி மர்லினா தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தார். தொடக்க கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் அதிஷி பின்னடைவை பெற்று கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையை பெற்றார். பாஜக சார்பாக ரமேஷ் பிதுரி கடைசி கட்டம் வரை இங்கே முன்னிலை வகித்தார். அதிஷி 41,530 வாக்குகள் பெற்று வென்ற நிலையில் பாஜக ரமேஷ் பிதுரி 40,541 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் அல்கா லம்பா வெறும் 3,377 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

கல்காஜி தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.பிஜ்வாசன், சங்கம் விஹார், அம்பேத்கர் நகர், சத்தர்பூர், தியோலி, துக்ளகாபாத், பாலம், பதர்பூர் மற்றும் மெஹ்ராலி ஆகிய ஒன்பது தொகுதிகளை கொண்ட தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக கல்காஜி உள்ளது. இங்கே மொத்தமாக 1,46,750 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து அதன் பின் ஆம் ஆத்மிக்கு சாதகமான தொகுதியாக மாறியது.
1993 பூர்ணிமா சேதி இங்கே பாரதிய ஜனதா கட்சி சார்பாக வென்றார்.
1998 சுபாஷ் சோப்ரா இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வென்றார்.
2003 சுபாஷ் சோப்ரா இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வென்றார்.
2008 சுபாஷ் சோப்ரா இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வென்றார்.
2013 ஹர்மீத் சிங் கல்கா சிரோமணி அகாலி தளம் சார்பாக வென்றார்.
2015 அவதார் சிங் ஆம் ஆத்மி கட்சி சார்பாக வென்றார்.
2020ல் முதல்வர் அதிஷி ஆம் ஆத்மி கட்சி சார்பாக வென்றார்.
வெற்றி :
ஆம் ஆத்மி சார்பாக அதிஷி மர்லினா போட்டியிடுகிறார்.
பாஜக சார்பாக ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார்
காங்கிரஸ் சார்பாக அல்கா லம்பா போட்டியிடுகிறார்.
கடந்த 2020 சட்டசபை தேர்தலில் 55,897 வாக்குகளை பெற்று 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிஷி இங்கே வென்றார்.
இதுவரை அங்கே எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 47 இடங்களிலும், ஆம் ஆத்மி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கே பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி - பாஜக - பாஜக இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிட்டது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications