Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி தேர்தல்: 2013, 2015, 2020 முடிவுகள் எப்படி இருந்தன? பாஜக எத்தனை தொகுதிகளில் ஜெயித்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தி, பாஜக ஆட்சிக் கட்டிலில் அமருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், கடந்த 2015 மற்றும் 2020 தேர்தல் ரிசல்ட் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம். ஆம் ஆத்மி எத்தனை தொகுதிகள் ஜெயித்து இருந்தது.. பாஜக தனது கணக்கை அந்த தேர்தலில் துவங்கியதா என்பது உள்ளிட்ட விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். கடந்த 3 தேர்தலில் தொடர் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. எனினும் பாஜக ஆம் ஆத்மி இடையே தான் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

மேலும் டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக 45 முதல் 55 தொகுதிகள் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் இந்த முறை ஆளும் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதேபோன்று கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சியமைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில், பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு தலைநகர் டெல்லியை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில் டெல்லியில் கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களில் முடிவு எப்படி இருந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


2013 சட்டசபை தேர்தல்:

டெல்லி சட்டசபை தேர்தலில் 2013 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. 2015 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்களில் தொடர்ந்து இரண்டிலும் ஆம் ஆத்மியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்பதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.


டெல்லி சட்டசபை தேர்த 2015:

டெல்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

டெல்லி சட்டசபை தேர்தல் 2020:

2020 டெல்லி சட்டசபை தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியே அசத்தல் வெற்றியை பெற்றது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்ப்பு அலையை சமாளித்து 62 தொகுதிகளில் ஆம் ஆத்மியால் வெற்றியை பெற முடிந்தது. அப்போது பாஜக 8 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 1998- 2013 ஆம் ஆண்டு வரை டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது.

கட்சிகள்/ மொத்தம் 70தொகுதிகள் 2013 சட்டசபை தேர்தல் 2015 சட்டசபை தேர்தல் 2020 சட்டசபை தேர்தல்
ஆம் ஆத்மி 28 67 62
பாஜக 31 3 8
காங்கிரஸ் 8 0 0
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+